கோழி / சிக்கன் மசாலா வறுவல்
கோழி கறி எந்த முறையில் தயாரித்தாலும் அனைவரும் விரும்பி உண்ணும் ஒரு உணவு. எளிதாக செய்யும் முறையாக இருந்தால் எப்போது வேண்டுமானாலும் செய்து வீட்டினரை மகிழ்விக்கலாம். முக்கியமாக குழந்தைகளை. இரவில் நான் மற்றும் ரொட்டிக்கு ஏற்றது இந்த கோழி மசாலா வறுவல். வெள்ளை சாதம் ரசத்துடனும், வெள்ளை சாதம் சாம்பாருடனும் பரிமாறலாம். கோழி கறி மட்டும் இருந்தால் வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு சுலபமாக செய்துவிடலாம். மிளகு தூள் அதிகமாக சேர்த்து செய்தால் மிளகு வறுவல், இதில் மசாலா அனைத்தும் சேர்த்து பொடித்து சேர்ப்பதால் வேறுவிதமான சுவையுடன் இருக்கும். நீங்களும் ஓரு முறை முயற்சித்து பாருங்கள்.
கோழி மசாலா வறுவல் செய்முறை
கோழி மசாலா வறுவல்
Servings: 4 People
Ingredients
- கோழி கறி – 1/2 கிலோ
- எண்ணெய் – தேவையான அளவு
- வெங்காயம் – 3
- தக்காளி – 3
- கரம் மசாலா (மசாலா பொருட்கள் பொடித்தது) – 1 மேசைக்கரண்டி பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு, மிளகு, சீரகம், அன்னாசி பூ, மராட்டி மொக்கு
- இஞ்சி விழுது – 2 மேசைக்கரண்டி
- பூண்டு விழுது – 2 மேசைக்கரண்டி
- மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி
- வர மிளகாய் தூள் – 1 மேசைக்கரண்டி
- கரம் மசாலா பொடி – 1 மேசைக்கரண்டி
- முந்திரி விழுது – 2 மேசைக்கரண்டி
- உப்பு – ருசிக்கேற்ப
- கொத்தமல்லி தழை – அலங்கரிக்க
- கிரீம் – அலங்கரிக்க
Instructions
- கோழி கறியயை எண்ணெயில் பொரித்து தனியாக எடுத்து வைக்கவும்
- வேறு ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி கரம் மசாலா பொடித்தது மற்றும் வெங்காயம் சேர்த்து வதக்கவும். தக்காளி சேர்த்து வதக்கவும்.
- அடுத்து கோழி கறி, முந்திரி விழுது தவிர அனைத்தையும் சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும்வரை வதக்கவும்.
- சிறிதளவு தண்ணீர் சேர்த்து சிக்கன், முந்திரி விழுது சேர்க்கவும்.
- கோழி நன்றாக வெந்தபின்னர் பிரஷ் கிரீம், கொத்தமல்லி தழை கொண்டு அலங்கரிக்கவும்.
பரிமாற பரிந்துரைப்பது
இது வறுவல் போன்றது. நான், ரொட்டியுடனும், வெள்ளை சாதம் ரசத்துடனும் பரிமாறலாம்.