தாவா கோழி (தாவா சிக்கன்)
தாவா கோழி பொதுவாக சாலை ஓரங்களில் உள்ள தாபாக்களில் பெரிய தாவாவில் செய்யப்படும் உணவாகும். தாவா சிக்கனை நான் மற்றும் ரொட்டியுடன் உண்ணலாம். குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய சுவையான தாவா சிக்கனை நீங்களும் சமைத்து உண்டு மகிழுங்கள்.
தாவா கோழி செய்முறை
தாவா கோழி
Ingredients
- கோழி இறைச்சி - 500 கிராம்
- வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
- தக்காளி – 1 ½ (நறுக்கியது / அரைத்தது)
- இஞ்சி விழுது – 1 மேசைக்கரண்டி
- பூண்டு விழுது – 1 மேசைக்கரண்டி
- மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
- வர மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி
- கரம் மசாலா தூள் – 1 தேக்கரண்டி
- வெந்தயம் – 1 தேக்கரண்டி
- கிரீம் – ½ கப்
- குட மிளகாய் - 1 (பெரியதுண்டுகளாக நறுக்கியது)
- வெங்காயம் – 1 (பெரியதுண்டுகளாக நறுக்கியது)
- வர மிளகாய் – 2
- எலுமிச்சை சாறு – 1 தேக்கரண்டி
- கொத்தமல்லி தழை - அலங்கரிக்க
- உப்பு - தேவைக்கேற்ப
Instructions
- ஒரு தாவாவில் எண்ணெய் ஊற்றி வெந்தயம் போடவும்.
- நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- நறுக்கிய தக்காளி, இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள் தூள், கரம் மசாலா தூள் அனைத்தையும் சேர்த்து நன்கு வதக்கவும்.
- கோழி இறைச்சி, கிரீம், எலுமிச்சை சாறு, சேர்த்து கோழி இறைச்சி வேகும் வரை சமைக்கவும்.
- கோழி இறைச்சி வெந்தபின்னர் குட மிளகாய், வெங்காய துண்டுகள், கொத்தம்ல்லி தழை, வரமிளகாய் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
- தாவா கோழி பரிமாற தயார்.