இறால் பிரியாணி

இறால் பிரியாணி

பிரியாணி என்பது அசைய பிரியர்களின் மிக விருப்பமான ஒன்று. இதில் என் குடும்பமும் அடங்கும். எல்லா விதமான அசைவத்திலும் நான் பிரியாணி செய்வது வழக்கம். இறால் பிரியாணி அதில் மிக சுவையானது. கடல் உணவுப் பிரியர்கள் இதை விரும்புவார்கள்.

ப்ரான், ஷிரிம்ப் (ஆங்கிலத்தில் ) என்று இரு வகை இறால் உண்டு. இரண்டிற்கும் சில வித்யாசங்கள் உள்ளன. சமையலில் ஒரே போல் உபயோகப்படுத்தலாம்.ஷிரிம்ப் என்பது அமெரிக்க நாடுகளில் கிடைக்கும். நம் நாட்டில் ப்ரான் அதிகம் கிடைக்கும்.

இந்த பிரியாணி மற்ற பிரியாணி போல் தான். இது கடல் உணவு என்பதால் கொஞ்சம் மசாலாவை குறைத்து சமைக்க வேண்டும். பிரியாணியில் தேங்காய் பால் சேர்த்தால் எனக்கு பிடிக்கும். அது ஒரு நல்ல சுவை தரும். இந்த செய்முறையை பின்பற்றினால் அருமையான இறால் பிரியாணி சாப்பிடலாம்.

இறால் பிரியாணி செய்ய விரிவான வீடியோ வழிமுறைகள்

செய்முறை

இறால் பிரியாணி

இறால் பிரியாணி மற்ற பிரியாணி போல் தான். இது கடல் உணவு என்பதால் கொஞ்சம் மசாலாவை குறைத்து சமைக்க வேண்டும். பிரியாணியில் தேங்காய் பால் சேர்த்தால் எனக்கு பிடிக்கும். அது ஒரு நல்ல சுவை தரும். இந்த செய்முறையை பின்பற்றினால் அருமையான பிரியாணி சாப்பிடலாம்.
Prep Time20 minutes
Cook Time40 minutes
Course: Main Course
Cuisine: Indian
Author: டாலியா டுவிங்கிள்

Ingredients

செய்ய தேவையான பொருட்கள்

  • இறால் – 1 கிலோ
  • பாஸ்மதி அரிசி – 2 கப்
  • பெரிய வெங்காயம் – 2 நீளவாக்கில் வெட்டியது
  • தக்காளி – 2 மிக பொடியாக நறுக்கவும்
  • பச்சை மிளகாய் – 3 கீறியது
  • இஞ்சி – 1 துண்டு
  • பூண்டு – 10 பற்கள்
  • சோம்பு – 1 தேக்கரண்டி
  • எலுமிச்சை – 1
  • கொத்தமல்லி இலை – 1 கையளவு
  • புதினா – 1 கையளவு விரும்பினால்
  • மிளகாய் தூள் – 3-4 தேக்கரண்டி
  • கொத்தமல்லி தூள் – 2 தேக்கரண்டி
  • மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
  • தயிர் – ¼ கப்
  • தேங்காய் பால் – 1 கப்
  • தண்ணீர் – 2 கப்
  • உப்பு – தேவையான அளவு
  • நெய் – 2 தேக்கரண்டி
  • எண்ணெய் – 2 தேக்கரண்டி

மசாலா பொருட்கள்

  • கிராம்பு – 3
  • பட்டை – 1
  • ஏலக்காய் – 2
  • பிரிஞ்சி இலை – 1
  • நட்சத்திர சோம்பு – 1
  • கல்பாசி – 1
  • மிளகு – 1/2 தேக்கரண்டி

Instructions

தயாரிக்கும் வழிமுறைகள்

  • இறாலை வெட்டி சுத்தமாக கழுவி வைக்கவும்.
  • ¼ தேக்கரண்டி மஞ்சள் தூள், எலுமிச்சை (பாதி போதும்) சாறு, உப்பு ஆகியவற்றை இறாலுடன்சேர்த்து ஊற விடவும்.
  • அரிசியை நன்றாக கழுவி ஊற வைக்கவும்.
  • இஞ்சி, பூண்டு, சோம்பு இவை மூன்றையும் பொடியாக தட்டி வைக்கவும்.

செய்முறை

  • கடாய் அல்லது குக்கரில் எண்ணெய் ஊற்றி,லேசாக சூடான பின் மசாலா பொருட்கள் கிராம்பு,
  • பட்டை, ஏலக்காய், பிரிஞ்சி இலை, நட்சத்திர சோம்பு, கல்பாசி, மிளகு சேர்க்கவும்.
  • வெட்டிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக ஆகும் வரை வதக்கவும்.சிறிது உப்பு சேர்த்தால் விரைவாக வதங்கும்.
  • தட்டி வைத்த இஞ்சி, பூண்டு, சோம்பு சேர்த்து 2-3 நிமிடங்கள் பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.
  • பொடியாக நறுக்கி வைத்த தக்காளி சேர்க்கவும்.நன்றாக குழையும் வரை வதக்கவும்.
  • பொடியாக நறுக்கி வைத்த கொத்தமல்லி, புதினாவின் ஒரு பகுதியை சேர்க்கவும்.2 நிமிடங்கள் வதக்கவும்.
  • ஊற வைத்த இறாலை சேர்க்கவும்.மிளகாய் தூள், சேர்த்து 2 நிமிடங்கள் சேர்த்து 2 நிமிடங்கள் மட்டும் வதக்கவும். அதிகம் நேரம் வதிக்கினால் இறால் ரப்பர் போல் ஆகிவிடும்.
  • நன்றாக அடித்த தயிர், கொத்தமல்லி தூள் சேர்க்கவும். 2 நிமிடங்கள் வதக்கவும்.
  • தேங்காய் பால் சேர்த்து, சிறிது நேரம் கொதிக்கவிடவும். பின்னர் அரிசி மற்றும் தேவையான தண்ணீர் சேர்க்கவும்.
  • பின்னர் கொதிக்கவிடவும். மீதமுள்ள எலுமிச்சை சாறு பிழிந்து சேர்க்கவும். உப்பு, காரம் போதுமாக உள்ளதா என்று சரி பார்க்கவும்.தேவைப்பட்டால் சேர்க்கவும்.
  • குக்கரை மூடி,விசில் போட்டு அடுப்பை நன்றாக குறைத்து 15 நிமிடங்கள் கழித்து அடுப்பை நிறுத்தவும். (குறிப்பு : மின் அடுப்பில் செய்ய நினைத்தால் கொதிக்கவிட்ட அனைத்தையும் மின் அடுப்பில் மாற்றி வேகவிடவும்.வார்ம் மோட் வரும் வரை விட வேண்டும்.)
  • கொத்தமல்லி இலை சேர்த்து ப்ஃபொர்க் வைத்து லேசாக கிளறவும். அடுப்பை நிறுத்தினாலும், குக்கரில் இன்னும் 5 நிமிடங்கள் தம்மில் இருக்கட்டும்.

இறால் பிரியாணி செய்முறை விரிவான முறையில்

கடாயில் அல்லது குக்கரில் எண்ணெய் ஊற்றி, மசாலா பொருட்கள் கிராம்பு, பட்டை, ஏலக்காய், பிரிஞ்சி இலை, நட்சத்திர சோம்பு, கல்பாசி, மிளகு சேர்க்கவும்.

இறால் பிரியாணி செய்முறை

தட்டி வைத்த இஞ்சி, பூண்டு, சோம்பு சேர்த்து 2-3 நிமிடங்கள் பச்சை வாசம் போகும் வரை வதக்கி, தக்காளி சேர்த்து நன்றாக குழையும் வரை வதக்கவும்.

இறால் பிரியாணி செய்முறை

பொடியாக நறுக்கி வைத்த கொத்தமல்லி, புதினாவின் ஒரு பகுதியை சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும். ஊற வைத்த இறாலை சேர்க்கவும். மிளகாய் தூள், கொத்தமல்லி தூள் சேர்த்து 2 நிமிடங்கள் மட்டும் நன்றாக கலக்கும் வரை வதக்கவும்.

தேங்காய் பால் சேர்த்து கொதிக்கவிடவும்.

இறால் பிரியாணி செய்முறை

பின்னர் அரிசி,தேவையான தண்ணீர் சேர்க்கவும். கொதிக்கவிடவும். மீதமுள்ள எலுமிச்சை சாறு பிழிந்து சேர்க்கவும். உப்பு, காரம் தேவைப்பட்டால் சேர்க்கவும்.

இறால் பிரியாணி செய்முறை

குக்கரை மூடி, விசில் போட்டு அடுப்பை நன்றாக குறைத்து 15 நிமிடங்கள் விட்டு நிறுத்தவும். கொத்தமல்லி இலை சேர்த்து ப்ஃபொர்க் வைத்து லேசாக கிளறவும்.

இறால் பிரியாணி செய்முறை

பரிமாற பரிந்துரைப்பது

  • சூடான இறால் பிரியாணியை தங்களுக்கு பிடித்தமான ராய்தாவுடன் பரிமாறலாம்.
இறால் பிரியாணி


உங்கள் கருத்துக்களை சமர்ப்பிக்கவும்...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.