ஒரு கடாயில் எண்ணெயை சூடாக்கி கடுகு வெடிக்கவிடவும்.
கடலைப் பருப்பு , உளுத்தம் பருப்பு, முந்திரிப் பருப்பு சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.
வர மிளகாய், கருவேப்பிலை, பெருங்காயத் தூள் சேர்க்கவும்.
துறுவிய தேங்காய் துருவலை சேர்த்து லேசாக சிகப்பாக மாறும் வரை வறுக்கவும். முழுவதுமாக சிவந்து விடாமல் வறுத்துக் கொள்ளவும்.
தேவையான அளவு உப்பு சேர்த்து வடித்த சாதத்தை சேர்த்து எல்லா பொருட்களும் நன்றாக கலக்கும் வரை கிளறி விடவும். அடுப்பை அணைக்கவும். இப்போது தேங்காய் சாதம் பரிமாற தயார்.