முட்டை புலாவ்
முட்டை புலாவ் மிக எளிதாக செய்யக்கூடிய ஒரு உணவாகும். காய்கறிகள் இல்லாதபோது அவசரத்திற்கு கைகொடுக்கும் எளிய சமையலாகும். மதிய உணவிற்கு ஏற்றது. காய்கறிகள் இல்லாதபோது காலை வேலையில் லன்ச் பாக்ஸ் கட்ட ஏற்றது. குழந்தைகளுக்கு பிடித்த உணவு வகைகளில் இதுவும் ஒன்று.
முட்டை புலாவ் செய்முறை
முட்டை புலாவ்
Ingredients
- பாஸ்மதி அரிசி – 2 கிண்ணம்
- முட்டை - 2 (அ) 3
- நெய் (அ) வெண்ணெய் (அ) எண்ணெய் -2 மேசைக்கரண்டி
- வெங்காய தாள் - அலங்கரிக்க
- வெங்காயம் – ¼ (நறுக்கியது)
- பச்சை மிளகாய் – 5 (கீரியது)
- தக்காளி (சிறியது) - 1 (நறுக்கியது)
- இஞ்சி-பூணுடு விழுது – 1 ½ தேக்கரண்டி
- கரம் மசாலா – (பிரியாணி இலை - 1, கிராம்பு - 3, பட்டை - 2, அன்னாசி பூ - 1)
- உப்பு - தேவையான அளவு
- தண்ணீர் – 3 டம்ளர்
Instructions
- கடாயில் நெய்யை சூடாக்கி கரம் மசாலாவை பொரிக்கவும்.
- வெங்காயம், இஞ்சி-பூண்டு விழுது, தக்காளி, பச்சை மிளகாய் மற்றும் உப்பு சேர்த்து கிளறவும்.
- முட்டையை உடைத்து அதனுடன் நன்றாக கிளறவும்.
- முட்டை நன்றாக பொரிந்த பின்னர் தண்ணீர் சேர்க்கவும்.
- தண்ணீர் கொதிக்க ஆரம்பித்த பின்னர் ஊற வைத்த அரிசியை சேர்த்து குறைந்த தீயில் வேக வைக்கவும். அரிசியை நன்றாக கலந்து விட்டு உப்பு சேர்க்கவும். வெங்காய தாள் கொண்டு அலங்கரிக்கவும். மிகவும் சுலபமாக விரைவாக செய்யக்கூடியதாகும்.
பரிந்துரைப்பது
- அரிசியை ஊற வைத்து சமைத்தால் அரிசி உடையாமல் இருக்கும்.