ப்ரைட் ரைஸ்
ப்ரைட் ரைஸ் என்பது மீதமான சாதம், காய்கள் வைத்து செய்வதாகும். பாரம்பரியத்தில் இந்த உணவு வகை அடுப்பை குறைக்காமல் செய்தால் காய்களின் முறுமுறுப்பு மாறாமல் ப்ரைட் ரைஸ் சுவையாக இருக்கும். சாதம் ஆற வைத்து பின்னர் உபயோகிக்க வேண்டும். வீட்டில் காய்கள், சிக்கன், முட்டை என்று எது இருந்தாலும் அதை வைத்து ப்ரைட் ரைஸ் செய்யலாம். இதை வாங்கோழி ப்ரைட் ரைஸ், ஈரால் ப்ரைட் ரைஸ், வெண்பன்றி ப்ரைட் ரைஸ், ஆட்டுக்கறி ப்ரைட் ரைஸ், பீஃப் ப்ரைட் ரைஸ் என்று உங்கள் சுவை/ தேவைக்கேற்ப மாற்றி செய்து கொள்ளவும்.
சைவ வகை ப்ரைட் ரைஸ் என்பது வெஜிடபிள் ப்ரைட் ரைஸ், முட்டை ப்ரைட் ரைஸ் என்பதாகும். வெஜிடபிள் ப்ரைட் ரைஸிற்கு மட்டன்/ முட்டை/ சிக்கன் தவிர்த்துவிடவும். மாம்பழம், பைனாப்பிள் போன்ற பழங்கள் கூட இதில் சேர்க்கலாம்.
ப்ரைட் ரைஸ்
Ingredients
- அரிசி-2 டம்ளர் வேகவைக்காதது (அல்லது 4 டம்ளர் மீதமான சாதம்)
- காய்கள் - 1 டம்ளர் (ஓரு கை அளவு வெங்காயம், கேரட், பீன்ஸ், நிலக்கடலை, பச்சை பட்டாணி, முட்டைகோஸ், குடைமிளகாய், காளான், சோளம், மற்றும் பல.)
- கோழிகறி - 1 கிண்ணம்
- முட்டை-2 அல்லது 3
- பூண்டு - 1 மேசைக்கரண்டி
- இஞ்சி - 1 மேசைக்கரண்டி
- வெங்காயத்தாள் - 1 கட்டு
- சோயா சாஸ் - 2 மேசைக்கரண்டி
- உப்பு - தேவையான அளவு
- மிளகு தூள் - 1 மேசைக்கரண்டி
- எண்ணெய் (அல்லது ஆலிவ் ஆயில் - 2 மேசைக்கரண்டி
- அஜினொமொட்டொ - 1/4 தேக்கரண்டி (விரும்பினால்)
Instructions
- காய்கறிகள் அனைத்தையும் ஒரே அளவில் வெட்டிக்கொள்ளவும்.
- கோழிகறியை நீளவாக்கில் துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
- ப்ரைடு ரைஸ் செய்ய மீதமான சாதம் அல்லது குளிர்சாதனப்பெட்டியில் வைத்த சாதம் ஏற்றது. மீதமான சாதம் இல்லையெனில் 2 டம்ளர் அரிசிக்கு 3 டம்ளர் தண்ணீர் சேர்த்து வடித்து ஒரு தட்டில் கொட்டி ஆற வைக்கவும். சாதம் சூடாக இருந்தால் குழைந்துவிடும். பாஸ்மதி அரிசி அல்லது மற்ற எந்த அரிசியிலும் செய்யலாம்.
- முட்டையை உடைத்து ஒரு கிண்ணத்தில் ஊற்றி கொள்ளவும். ஒரு கடாயில் ஆயில் ஊற்றி முட்டையை சேர்த்து ஒரு கரண்டியால் நன்றாக கிளறவும். இதை தனியாக எடுத்து வைக்கவும்.
- கடாயில் ஆயில் ஊற்றி நறுக்கிய கறி துண்டுகள் சேர்த்து கிளறவும். உப்பும், மிளகும் சிரிதளவு சேர்க்கவும். கறி வேகும் வரை அடுப்பை குறைத்து வைத்து கிளறவும். வெந்த பின்னர் கறியை ஓரத்தில் ஒதுக்கி நடுவில் சிறிது இடம் வரும் வரும்படி நகற்றிவிட்டு கொள்ளவும்.
- நடுவில் சிறிது ஆயில் சேர்த்து நறுக்கிய இஞ்சி, பூண்டு சேர்த்து சிறிது நேரம் வதக்கி காய்கறிகளை சேர்த்து 2 நிமிடம் வேகவிடவும்.
- சோயா சாஸ், உப்பு, அஜினோமோட்டோ சேர்த்து காய்கறிகள், கறியுடன் 1 நிமிடம் வதக்கவும். (அடர் வண்ணம்) சோயா சாஸ் உபயோகித்தால் நிறம் சற்று அதிகமாகவும், வெளிர் வண்ண சோயா சாஸ் உபயோகித்தால் நிறம் சற்று வெளிர் நிறமாகவும் பிரைடு ரைஸ் இருக்கும். நான் இங்கு (அடர் வண்ணம்) சோயா சாஸ் உபயோகித்துள்ளேன்.
- ஆற வைத்த சாதத்தை இதனுடன் சேர்த்து கலந்து வதக்கவும். சோயா சாஸ் அனைத்துடனும் கலக்கும் வரை கிளறவும்.
- இறுதியாக நறுக்கிய வெங்காய தாள், முட்டை வறுத்தது கலக்கவும். சூடாக பரிமாறவும்.
விரிவான படிமுறைகள்
முதலில் சாதத்தை வேக வைத்து ஆறவிடவும். ப்ரைடு ரைஸ் செய்ய மீதமான சாதம் அல்லது குளிர்சாதனப்பெட்டியில் வைத்த சாதம் ஏற்றது. மீதமான சாதம் இல்லையெனில் 2 டம்ளர் அரிசிக்கு 3 டம்ளர் தண்ணீர் சேர்த்து வடித்து ஒரு தட்டில் கொட்டி ஆற வைக்கவும்.
ஒரு கடாயில் ஆயில் ஊற்றி முட்டையை சேர்த்து ஒரு கரண்டியால் நன்றாக கிளறவும். இதை தனியாக எடுத்து வைக்கவும்.
கடாயில் ஆயில் ஊற்றி நறுக்கிய கறி துண்டுகள் சேர்த்து கிளறவும். உப்பும், மிளகும் சிரிதளவு சேர்க்கவும். கறி வேகும் வரை அடுப்பை குறைத்து வைத்து கிளறவும். வெந்த பின்னர் கறியை ஓரத்தில் ஒதுக்கி நடுவில் சிறிது இடம் வரும் வரும்படி நகற்றிவிட்டு கொள்ளவும்.
நடுவில் சிறிது ஆயில் சேர்த்து நறுக்கிய இஞ்சி பூண்டு சேர்த்து சிறிது நேரம் வதக்கி காய்கறிகளை சேர்த்து 2 நிமிடம் வேகவிடவும்.
சோயா சாஸ், உப்பு , அஜினோமோட்டோ சேர்த்து காய்கறிகள், கறியுடன் 1 நிமிடம் வதக்கவும்.
ஆற வைத்த சாதத்தை இதனுடன் சேர்த்து கலந்து வதக்கவும். சோயா சாஸ் அனைத்துடனும் கலக்கும் வரை கிளறவும்.
இறுதியாக நறுக்கிய வெங்காய தாள், வறுத்த முட்டையை கலக்கவும். சூடாக பரிமாறவும்.
வேறுபாடாக பரிந்துரைப்பது
• புளிப்பு சுவை வேண்டுமானால் 1 தேக்கரண்டி வினிகர்/ எலுமிச்சை சாறு சேர்க்கலாம்.
• வீட்டில் காய்கள், சிக்கன், முட்டை என்று எது இருந்தாலும் அதை வைத்து ப்ரைட் ரைஸ் செய்யலாம். இந்த செய்முறை இந்திய-சீன வகை ப்ரைட் ரைஸ் செய்முறையாகும். உங்கள் விருப்பதிற்கேற்ப நீங்கள் செய்யலாம்.
பரிமாற பரிந்துரைப்பது
• ப்ரைட் ரைஸை தக்காளி சாஸ் உடன் பரிமாறலாம்.
• விருந்தினருக்கு இந்திய-சீன வறுவல்களுடன் பரிமாறலாம்.