சீரக சாதம்

சீரக சாதம்

சீரக சாதம் (சீரக புலாவ்) என்பது கலவை சாத வகைகளில் மிகவும் சுலபமாக செய்யும் ஒன்றாகும். வேக வைத்த சாதத்துடன் சீரகம் தாளித்து செய்வது தான் சீரக சாதம். இது வட இந்தியாவில் மிகவும் பிரசித்தமான உணவாகும். பாகிஸ்தானிலும் இதை சீரக சாதம் என்றே அழைக்கிறார்கள்.

சீரக சாதம் எந்த வகையான உணவுடனும் சேரும். அதனால் விருந்திற்கு இதை தயங்காமல் செய்யலாம். நான் பொதுவாக விருந்திற்கு இதை 2-3 குழம்புகளுடன், சைட் டிஸ்களுடன் செய்வது வழக்கம். குழந்தைகள், பெரியவர்கள் என்று அனைவரும் இதை விரும்புவார்கள். திருமணமாகாத இளைஞர்கள் கூட இதை எளிதாக செய்ய முடியும்.

சுவைமிக்க சீரக சாதம் செய்ய வீட்டில் இருக்கும் சமையல் பொருட்களே போதுமானதாகும். தரமான பாஸ்மதி அரிசி, சீரகம், நெய் ஆகியவை அத்தியாவசியம். மற்ற பொருட்கள் இல்லாது போனாலும் பரவாயில்லை. என் குழந்தைகள் மிதமான மசாலாவை தான் விரும்புவார்கள். பட்டர் சிக்கன், மலாய் கொஃப்தா, பன்னீர் பட்டர் மசாலா ஆகியவைகளுடன் சீரக சாதம் பிரமாதமாக இருக்கும்.

இதை குக்கர், ரைஸ் குக்கர், அடிப்பாகம் கனமான பாத்திரம் போன்றவற்றில் சமைக்கலாம். எல்லாவற்றிக்கும் நான் செய்முறையை தந்துள்ளேன். உங்களின் விருப்பதிற்கேற்ப நீங்கள் செய்யலாம்.

சீரக சாதம் செய்முறை

சீரக சாதம்

Course: Main Course
Cuisine: Indian
Author: டாலியா டுவிங்கிள்

Ingredients

  • பாஸ்மதி அரிசி - 1.5 டம்ளர்
  • நெய் அல்லது வெண்ணெய் அல்லது ஆயில் - 2 மேசைகரண்டி
  • சீரகம் - 1 மேசைகரண்டி
  • கரம் மசாலா பொடி - பிரியாணி இலை -1, கிராம்பு -3, பட்டை - 1 , அன்னாசி பூ - 1, ஏலக்காய் - 2 (அனைத்தையும் பொடிக்கவும்)
  • கொத்தமல்லி இலை - 1 மேசைகரண்டி
  • உப்பு - தேவையான அளவு
  • தண்ணீர் - 2.5 டம்ளர்

Instructions

  • அரிசியை கழுவி ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். பின்னர் தண்ணீரை வடிகட்டி வைக்கவும்.
    ஜீரக சாதம் செய்முறை
  • கடாய் அல்லது குக்கரில் நெய் அல்லது வெண்ணெய் ஊற்றி கரம் மசாலா சேர்த்து வதக்கவும்.
    ஜீரக சாதம் செய்முறை
  • சீரகம் சேர்த்து வெடிக்கவிடவும்.
  • ஊற வைத்த அரிசியை சேர்த்து வதக்கி நெய்யுடன் நன்றாக கலக்குமாறு வதக்கவும். (ரைஸ் குக்கரில் சமைப்பதாக இருந்தால் இதை ரைஸ் குக்கரில் மாற்றி தண்ணீர் சேர்த்து சுவிட்ச் ஆன் செய்யவும்)
    ஜீரக சாதம் செய்முறை
  • கொதிக்க வைத்த (அளந்த) தண்ணீரை அரிசியில் சேர்க்கவும். உப்பு சேர்க்கவும்.
    ஜீரக சாதம் செய்முறை
  • குக்கரில் செய்வதாக இருந்தால் குக்கரை மூடி அரிசியை வேகவிடவும்.
  • கடாயில் செய்வதாக இருந்தால் கொதிக்க ஆரம்பித்த பின்னால் ஒரு மூடியால் மூடி அடுப்பை குறைத்து 15 நிமிடம் வேகவிடவும். அரிசி நன்றாக வெந்திருந்தால் மிருதுவாக இருக்கும். குக்கராக இருந்தால் வெயிட் போட்டு அடுப்பை சிம்மில் 10 நிமிடம் வைக்கவும்.
    ஜீரக சாதம் செய்முறை
  • ஒரு போர்க் கொண்டு மெதுவாக கிளறி விடவும். கொத்தமல்லி இலை கொண்டு அலங்கரிக்கவும்.
    ஜீரக சாதம் செய்முறை

பரிமாற பரிந்துரைப்பது

  • எனக்கு சீரக சாதத்தை பட்டர் சிக்கன், மலாய் கொஃப்தா, பன்னீர் பட்டர் மசாலா, மேத்தி சிக்கன் ஆகியவைகளுடன் பரிமாற பிடிக்கும்.
  • சீரக சாதம் எந்த வகையான உணவுடனும் சேரும். சைவ, அசைவ உணவுகளுடன் எதுவானாலும் சீரக சாதம் பிரமாதமாக பொருந்தும்.

சீரக சாதம் செய்ய வீடியோ வழிமுறைகள்

சீரக சாதம் தயிர் சிக்கனுடன்

சீரக சாதம் தயிர் சிக்கனுடன்

சீரக சாதம் மிளகு(பெப்பர்) சிக்கனுடன்

சீரக சாதம் மிளகு(பெப்பர்) சிக்கனுடன்



உங்கள் கருத்துக்களை சமர்ப்பிக்கவும்...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.