தேங்காய் சம்மந்தி
தேங்காய் சம்மந்தி மிகவும் பழமையான ஒரு சமையல் வகைகளில் ஒன்றாகும். கேரளா மற்றும் தமிழ் நாட்டின் தென்னகத்தில் (கன்னியாகுமரி மாவட்டத்தில்) அதிகமாக செய்யப்படுவதாகும். எனது பாட்டி தினமும் தேங்காய் சம்மந்தியை அம்மிக்கல்லில் (அரைக்கும் கல்) அரைப்பார்கள். அரைத்து உருண்டையாக உருட்டி தேங்காய் மூடியில் எடுத்துவைப்பார்கள். இது ஊறுகாய் போல இருக்கும், சிறிதளவு வைத்துக்கொண்டால் போதுமானதாக இருக்கும். மிகவும் எளிதாக வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு தயாரித்துவிடலாம்.
தேங்காய் சம்மந்தி (உலர்ந்த சட்னி ) செய்ய வீடியோ வழிமுறைகள்
தேங்காய் சம்மந்தி செய்முறை
தேங்காய் சம்மந்தி
Ingredients
- தேங்காய் – 1 கிண்ணம்
- வர மிளகாய் பொடித்தது – 4-5
- சாம்பார் வெங்காயம் - 4
- பூண்டு – 2 பற்கள்
- புளி – சிறிய எலுமிச்சை அளவு
- உப்பு – ருசிகேற்ப
- கருவேப்பிலை - 3-5 இலைகள்
Instructions
- மேலே குறிப்பிட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் மிக்ஸியின் சிறிய ஜாரில் போடவும்.
- முடிந்தளவு கொரகொரப்பாக தண்ணீர் சேர்க்காமல் அரைக்கவும். அரைக்கும்போது இடையில் ஒன்று அல்லது இரண்டு முறை கலந்துவிட்டு கொள்ளவும். வெங்காயம், தேங்காயில் உள்ள ஈரத்தன்மை அரைக்க போதுமானதாக இருக்கும்.
- ருசி பார்த்து தேவைப்பட்டால் உப்பு சேர்க்கவும். பொதுவாக இது காரமாக இருக்கும், புளி சேர்ப்பதால் சற்று புளிப்பாகவும், உப்புடன் சேர்ந்து சுவையாக இருக்கும்.
மாறுபாடாக பரிந்துரைப்பது
தமிழ்நாட்டில் இதற்கு மாறுபாடாக தேங்காய் துகையல் என்றும், ஆந்திராவில் கொப்பரை பச்சடி என்பதையும் செய்வார்கள். தேங்காய் துகையல், 2 மேசைக்கரண்டி உளுத்தம் பருப்பை, 1 தேக்கரண்டி எண்ணெயில் வர மிளகாய் சேர்த்து வறுத்து துருவிய தேங்காய், புளி, கருவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து கொரகொரப்பாக அரைப்பதாகும். வெங்காயம், பூண்டு சேர்க்க தேவையில்லை. கொப்பரை பச்சடி செய்ய 1 மேசைக்கரண்டி கடலை பருப்பு, 1 மேசைக்கரண்டி உளுத்தம் பருப்பு வறுத்து துருவிய தேங்காய், வர மிளகாய், பெருங்காயம், புளி சேர்த்து அரைப்பதாகும். நான் எல்லாவகைகளையும் சமைத்துள்ளேன். அனைத்துவகைகளும் சுவையாக இருக்கும்.
பரிமாற பரிந்துரைப்பது
- சூடான வடித்த சாதத்துடன் கலந்து சாப்பிட்டால் ருசிக்கு அளவேயில்லை.
- இதை டிபன் வகைகளான இட்லி, தோசை, வேகவைத்த மரவள்ளிகிழங்கு அல்லது பயறு கஞ்சியுடன் பரிமாறலாம்.