உடனடி பூண்டு ஊறுகாய்

உடனடி பூண்டு ஊறுகாய்

இந்தியாவில் ஊறுகாய் தினசரி உணவில் முக்கிய பங்கு வகிக்கிறது. இது எந்த வகை உணவிற்கும் கூடுதல் சுவையை கொடுக்கிறது. பழங்காலத்தில் ஊறுகாய் தயாரிப்பது ஒரு கலையாகும். மக்கள் பல நாட்கள் இதற்கு செலவழித்து மசாலா அரைத்து, தேவையான பாதுகாக்கும் பொருட்களை சரியான அளவில் சேர்த்து பல நாட்கள் கெடாமல் வைத்திருப்பார்கள். அதனால் எத்தனை மாதங்கள் ஆனாலும் கெடாமல் இருக்கும், குளிர்சாதன பெட்டியில் வைக்காமல். இந்த பூண்டு ஊறுகாய் என்பது நமது மூதாதையர்கள் தயாரிக்கும் பாரம்பரிய உணவு வகைகளில் ஒன்றாகும். இது பல பெயர்களில் அழைக்கப்படுகிறது – பூண்டு ஊறுகாய், வெளுத்துளி அச்சார் மற்றும் பல.

21ஆம் நூற்றாண்டில் குளிர்சாதன பெட்டி இல்லாத வீடுகளே இல்லை எனலாம். இதனால் ஊறுகாய் தயாரித்து கெடாமல் பாதுகாப்பது எளிதாக உள்ளது. நீங்கள் உடனடி ஊறுகாயை ஏறக்குறைய எல்லா காய்கறியிலும் தயாரிக்கலாம். இங்கு நான் உடனடி பூண்டு ஊறுகாய் செய்முறையை பகிர்கிறேன். பாரம்பரிய முறையில் பூண்டு ஊறுகாய் தயாரிக்க பூண்டு பற்களை எலுமிச்சை சாறில் ஊற வைத்து வெயிலில் வைப்பார்கள், அதனால் பூண்டு மிருதுவாகும். சிலர் பூண்டை ஆவியில் வேகவைப்பார்கள் அல்லது கொதிக்கும் தண்ணீரில் போடுவார்கள். மற்ற மசாலா பொருட்கள் பொதுவானதே.

பூண்டு உரிக்க நேரம் இல்லாவிடில் உரித்த பூண்டை கடையில் வாங்கிகொள்ளலாம். நீங்கள் பூண்டு ஊறுகாய் ரொட்டி, சுவையான குழம்பு செய்ய, சாண்ட்விச் தயாரிக்க பயன்படுத்தலாம். இப்போது தயாரிப்பு முறையை காண்போம்.

பூண்டு ஊறுகாய் செய்யும் வீடியோ வழிமுறைகள்

பூண்டு ஊறுகாய் செய்முறை

உடனடி பூண்டு ஊறுகாய்

Prep Time40 minutes
Cook Time20 minutes
Total Time1 hour
Course: Side Dish
Cuisine: Indian
Author: டாலியா டுவிங்கிள்

Ingredients

  • பூண்டு - 1/4 கிலோ (உரித்தது)
  • உப்பு – 2 மேசைக்கரண்டி
  • வர மிளகாய் தூள் – 6 மேசைக்கரண்டி
  • மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி
  • பெருங்காயம் – 1/2 தேக்கரண்டி
  • கொத்தமல்லி விதை – 2 மேசைக்கரண்டி
  • வெந்தயம் – 1 தேக்கரண்டி
  • கடுகு – 1 தேக்கரண்டி
  • சீரகம் – 1 தேக்கரண்டி
  • இஞ்சி – 2 அங்குல துண்டு
  • பச்சை மிளகாய் - 6
  • கடுகு – 1 தேக்கரண்டி (தாளிக்க)
  • கருவேப்பிலை – 1 கொத்து
  • நல்லெண்ணெய் – 1/2 கிண்ணம்
  • வினிகர் – 1/ 2 கிண்ணம்

Instructions

தயாரிப்புமுறை

  • பூண்டை தோல் உரித்து, கழுவி, கிச்சன் டவலில் துடைத்து காயவைத்துகொள்ளவும்.
  • வெறும் வாணலியில் வெந்தயம் , கொத்தமல்லி விதை, சீரகம், கடுகு அனைத்தையும் தீயை குறைத்துவைத்து வறுத்துகொள்ளவும். ஆறவைத்து பொடித்துகொள்ளவும். இதுவே ஊறுகாய் மசாலா தூள். இந்த தூள் ஊறுகாயை கெடாமல் பாதுகாக்கவும், ஊறுகாய்க்கு உண்டான தனி சுவையையும் கொடுக்கும். நீங்கள் அதிக நாட்கள் வைத்திருக்க போவதில்லையெனில் இந்த தூளை சேர்க்க வேண்டியதில்லை.
  • பூண்டு பற்கள் 15, இஞ்சி துண்டு, பச்சை மிளகாய் அனைத்தையும் கொரகொரப்பாக அரைக்கவும்.

செய்முறை

  • ஒரு வாணலியில் எண்ணெயை சூடாக்கி அதில் பூண்டு சேர்த்து 5 நிமிடங்கள் வதக்கவும். மிருதுவாக வேண்டும் அதே நேரம் கருகிவிக்கூடாது.
  • பூண்டை மட்டும் அரித்து எடுத்துவிடவும்.
  • அதே எண்ணெயில் கடுகு வெடிக்கவிடவும். பெருங்காயம், கருவேப்பிலை சேர்க்கவும்.
  • கொரகொரப்பாக அரைத்த பூண்டு, இஞ்சி, பச்சை மிள்காய் சேர்க்கவும். குறைந்த தீயில் சிறிது நேரம் வதக்கவும்.
  • மஞ்சள் தூள், தயாரித்துவைத்த ஊறுகாய் மசாலா, வர மிளகாய் தூளை ஒன்றன் பின் ஒன்றாக சேர்க்கவும். அடுப்பை குறைத்து வைத்து கொள்ளவும். மசாலா பொருட்கள் கருகிவிடக்கூடாது.
  • எண்ணெய் மேலே பிரிந்து வரும்வரை குறைந்த தீயில் வைத்திருக்கவும்.
  • உப்பு, வினிகர் சேர்க்கவும். வினிகருக்கு பதிலாக கெட்டியாக கரைத்த புளிகரைசல் அல்லது எலுமிச்சை சாறு சேர்க்கலாம். ஒரு கொதிவிடவும்.
  • பொரித்த பூண்டு சேர்த்து அனைத்தையும் 7-10 நிமிடங்கள் கொதிக்கவிடவும். எண்ணெய் மேலே பிரிந்து மசாலா பொருட்கள் அனைத்தும் பூண்டுடன் கலந்துவிடும்.
  • இந்த சுவையான பூண்டு ஊறுகாயை சுத்த்மான காற்று புகாத பாட்டிலில் ஆறிய பின்னர் எடுத்துவைக்கவும். சாதாரண வெப்பனிலையில் வைத்திருந்தாலே மாதகணக்கில் கெடாமல் இருக்கும். சுத்தமாக கையாள வேண்டும். ஈரக்கையில், ஈரக்கரண்டி உபயொகிக்க கூடாது. நீங்கள் குளிர்சாதன பெட்டியில் 1-2 வருடங்கள் வரையும் வைத்திருக்கலாம்.

பூண்டு ஊறுகாய் பரிமாறுவது

  • பூண்டு ஊறுகாய் சப்பாத்தி, கலவை சாதம் அல்லது வெள்ளை சாதத்துடன் ஒரு பொரியலுடன் பரிமாறலாம்.
  • இதை சாண்ட்விச் செய்யும் போது மேலேபரத்திவிட உபயோகிக்கலாம்.
  • பூண்டு ஊறுகாய் சிப்ஸுடன் உண்ண ஏற்றது.
  • ஊறுகாயை சிறிதளவு தயிருடன் கலந்து பரோட்டாவுடன பரிமாறலாம்.

உடனடி பூண்டு ஊறுகாய்



உங்கள் கருத்துக்களை சமர்ப்பிக்கவும்...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.