உடனடி மாங்காய் ஊறுகாய்
மாங்காய் ஊறுகாய் அல்லது மாங்காய் பிசறல் அல்லது கல்யாண மாங்காய் மிக எளிமையான நாக்கை சப்பு கொட்ட வைக்கும் ஊறுகாய் ஆகும். கல்யாண மாங்காய் என்பது அனைத்து திருமண விழாக்களிலும் பரிமாறப்படும் ஊறுகாய் ஆகும். தென்னிந்தியாவில் வெயில் காலத்தில் இதை செய்வர். கேரளாவில் இதை கடுமாங்கா அச்சார் என்று அழைப்பர். தெலுங்கில் இதை மாமிடுக்கியா பச்சடி என்றும் கர்நாடகாவில் மாவினகாயி உப்பினகாயி என்றும் அழைப்பர்.
ஊறுகாயை செய்தவுடன் சாப்பிடலாம் ஆனால் செய்து சில் மணிநேரங்கள் கழித்து சாப்பிட்டால் சுவை இன்னும் கூடுதலாக இருக்கும். தயிர் சாதம், கிச்சடி, சாம்பார் சாதம், கஞ்சி மற்றும் உப்புமா அனைத்துடனும் உண்ண ஏற்றது. ஊறுகாயை கவனமாக கையாண்டு குளிர்சாதனப் பெட்டியில் ஒரு வாரம் வைத்திருக்கலாம்.
உடனடி மாங்காய் ஊறுகாய் செய்முறை
உடனடி மாங்காய் ஊறுகாய்
Ingredients
- பச்சை மாங்காய் - 1 200 கிராம்
- மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
- வர மிளகாய் தூள் – 1 மேசைக்கரண்டி
- வெந்தயத்தூள் - 1 சிட்டிகை
- உப்பு - ருசிக்கேற்ப
- பெருங்காயம் - 1 சிட்டிகை
- கடுகு - 1 மேசைக்கரண்டி
- கருவேப்பிலை - 1 கொத்து
Instructions
- மாங்காயை நன்றாக கழுவி ஒரு துண்டால் ஈரம் போக துடைக்கவும்.
- சிறிய துண்டுகளாக தோலுடன் நறுக்கவும்.
- உப்பு, மஞ்சள் தூள், வெந்தயதூள், வர மிளகாய் தூள், அனைத்தையும் மாங்காயுடன் சேர்த்து நன்றாக கலக்கவும். ருசி பார்த்து ஏதேனும் தேவைப்பட்டால் சேர்க்கவும்.
- நல்லெண்ணெயை ஒரு கடாயில் ஊற்றி நன்றாக சூடாக்கவும். அதில் கடுகு, பெருங்காயம், கருவேப்பிலை சேர்க்கவும்.
- கடுகு பொரிந்தவுடன் மாங்காய் கலவையை சேர்க்கவும்.
- சுத்தமான ஈரமில்லா கரண்டியால் கிளறி விடவும். காய்ந்த சுத்தமான பாட்டிலில் மாற்றி வைக்கவும். உடனடியாகவும் பரிமாறலாம், ஆனால் சில மணி நேரம் கழித்து உண்டால் சுவை இன்னும் கூடுதலாக இருக்கும்.
குறிப்புகள்
- புளிப்பு சுவை உள்ள மாங்காயை உபயோகித்தால் ருசி கூடுதலாக இருக்கும். புளிப்பு சுவை குறைவான மாங்காயாக இருந்தால் 1 அல்லது 2 தேக்கரண்டி வினிகர் சேர்க்கவும்.
- ஈரமில்லா கரண்டி, மற்றும் பாட்டிலை உபயோகித்தால் விரைவில் கெடாமல் பாதுகாக்கலாம்.
பரிமாற பரிந்துரைப்பது
- இந்த மாங்காய் ஊறுகாய் சாதம், கஞ்சி, தயிர் சாதத்துடன் பரிமாறலாம்.