மேலே குறிப்பிட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் மிக்ஸியின் சிறிய ஜாரில் போடவும்.
முடிந்தளவு கொரகொரப்பாக தண்ணீர் சேர்க்காமல் அரைக்கவும். அரைக்கும்போது இடையில் ஒன்று அல்லது இரண்டு முறை கலந்துவிட்டு கொள்ளவும். வெங்காயம், தேங்காயில் உள்ள ஈரத்தன்மை அரைக்க போதுமானதாக இருக்கும்.
ருசி பார்த்து தேவைப்பட்டால் உப்பு சேர்க்கவும். பொதுவாக இது காரமாக இருக்கும், புளி சேர்ப்பதால் சற்று புளிப்பாகவும், உப்புடன் சேர்ந்து சுவையாக இருக்கும்.