தயிர் ஓட்ஸ்
தயிர் சாதம் தென்னிந்தியர்களின் பிடித்த உணவு வகைகளில் ஒன்றாகும். தென்னிந்திய வீடுகளில் தினசரி உணவில் நிச்சயம் தயிர் சாதம் இருக்கும். காரமான உணவிற்கு அடுத்து தயிர் சாதம் உண்பது அதுவும் வெயில் காலத்தில் மிகவும் இதமானது. சமயம் கிடைக்கும் போது ஓரு முழுமையான சாப்பிட்டிற்கு பின்னர் தயிர் உணவு வகைகளை உண்பதை நிச்சயம் நான் தவிர்க்க மாட்டேன். நான் ஏற்கனவே தயிர் சாதம், தயிர் சேமியா மற்றும் தயிர் இட்லி தயாரிப்பதை பகிர்ந்துள்ளேன்.
ஓட்ஸுடன் தயிர் சேர்த்து தயாரிப்பது தயிர் சாதம் போன்று ஒரு சுவையான உணவாகும். வாரத்தில் 2-3 முறைகள் ஓட்ஸ், சிறு தானிய வகைகளை உணவில் சேர்த்து கொள்வது நல்லது. ஓட்ஸில் புரத சத்து அதிகம் உள்ளது, நார் சத்தும் நிறைந்துள்ளதால் கொழுப்பு சத்து குறைய உதவுகிறது. வெளி நாடுகளில் ஓட்ஸ் அடிக்கடி இனிப்பு சேர்த்து பரிமாறப்படுகிறது. நான் ஏற்கனவே ஆப்பிள் பட்டை ஓட்ஸ் தயாரிப்பு முறையை கூறியுள்ளேன். இந்தியாவில் ஓட்ஸ் அதிகளவில் பயன்படுத்துகிறார்கள். எனது சமையல் குறிப்புகளில் ஓட்ஸ் சூப், பிஸிபேளா ஓட்ஸ் மற்றும் ஓட்ஸ் தோசை வகைகளை காணலாம். தயிர் ஓட்ஸ் இதில் ஒரு வகை ஆகும். தயிரின் புளிப்பு சுவையும் தாளித்தவற்றின் மணமும் நிறைந்திருக்கும். குழந்தைகளும், பெரியவர்களும் விரும்பி உண்பார்கள். ஓட்ஸை விரும்பாதவர்களும் தயிர் ஓட்ஸ் உண்டால் இதன் சுவையால் மனதை மாற்றி கொள்வார்கள்.
தயிர் ஓட்ஸ் தயாரிப்பு முறை
தயிர் ஓட்ஸ்
Ingredients
- ஓட்ஸ் – 1 கிண்ணம்
- தண்ணீர் / பால் – 2 கிண்ணம்
- புளிக்காத புதிய தயிர் – 3/4 கிண்ணம்
- உப்பு – தேவையான அளவு
- கொத்தமல்லி தழை – 1 மேசைக்கரண்டி (பொடியாக நறுக்கியது)
- மாதுளம் பழம் / துருவிய கேரட் – 1 மேசைக்கரண்டி (அலங்கரிக்க- விருப்பபட்டால்)
தாளிக்க தேவையான பொருட்கள்
- எண்ணெய் – 1 மேசைக்கரண்டி
- கடுகு – 1 தேக்கரண்டி
- உளுத்தம் பருப்பு – 1 தேக்கரண்டி
- வர மிளகாய் – 1
- பச்சை மிளகாய் – 1 (பொடியாக நறுக்கியது)
- இஞ்சி – 1/ 2 அங்குல துண்டு (பொடியாக நறுக்கியது)
- பெருங்காயம் – ஒரு சிட்டிகை
- கருவேப்பிலை – சிறிதளவு
Instructions
- ஒரு பாத்திரத்தில் ஓட்ஸ் மற்றும் தண்ணீர் சேர்த்து 3-4 நிமிடங்கள் ஓட்ஸ் வேகும் வரை வைக்கவும். மைக்ரோவேவில் மைக்ரோ ஹையில் 2 நிமிடங்கள் வைக்கலாம்.
- தயிரை கடைந்து வேக வைத்த ஓட்ஸுடன் கலக்கவும்.
- தாளிக்கும் கரண்டியில் எண்ணெய் சூடாக்கவும். கடுகு வெடிக்க விட்டு உளுத்தம் பருப்பு சேர்க்கவும். அடுத்து வர மிளகாய், கருவேப்பிலை சேர்க்கவும்.
- பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, பெருங்காயம் ஆகியவற்றை தாளித்ததுடன் சேர்க்கவும்.
- தாளித்ததை ஓட்ஸுடன் சேர்க்கவும். தேவையான அளவு உப்பு, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை சேர்க்கவும்.
- எல்லாவற்றையும் நன்றாக கலந்து விடவும். மாதுளம் பழ முத்துக்கள், விதையில்லா திராட்சை, நறுக்கிய வெள்ளரி துண்டுகள், பொடியாக நறுக்கிய மாங்காய், துருவிய கேரட் அல்லது வறுத்த முந்திரி கொண்டு அலங்கரிக்கவும்.
தயிர் ஓட்ஸ் பரிமாற பரிந்துரைப்பது
- தயிர் சாதம் போன்ற சுவையுடன் உள்ள தயிர் ஓட்ஸ் மாங்காய் ஊறுகாயுடன் உண்ணலாம். அல்லது இந்திய ஊறுகாய் வகை ஏதேனும் ஒன்றுடன் பரிமாறலாம்.
- வற்றல், மோர் மிளகாய், அல்லது வறுத்த காய்களுடன் (வாழைக்காய் வறுவல், உருளை கிழங்கு வறுவல்) பரிமாறலாம்.