மாதுளம் பழம் / துருவிய கேரட் – 1 மேசைக்கரண்டி(அலங்கரிக்க- விருப்பபட்டால்)
தாளிக்க தேவையான பொருட்கள்
எண்ணெய் – 1 மேசைக்கரண்டி
கடுகு – 1 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு – 1 தேக்கரண்டி
வர மிளகாய் - 1
பச்சை மிளகாய் – 1(பொடியாக நறுக்கியது)
இஞ்சி – 1/ 2 அங்குல துண்டு(பொடியாக நறுக்கியது)
பெருங்காயம் – ஒரு சிட்டிகை
கருவேப்பிலை – சிறிதளவு
Instructions
ஒரு பாத்திரத்தில் ஓட்ஸ் மற்றும் தண்ணீர் சேர்த்து 3-4 நிமிடங்கள் ஓட்ஸ் வேகும் வரை வைக்கவும். மைக்ரோவேவில் மைக்ரோ ஹையில் 2 நிமிடங்கள் வைக்கலாம்.
தயிரை கடைந்து வேக வைத்த ஓட்ஸுடன் கலக்கவும்.
தாளிக்கும் கரண்டியில் எண்ணெய் சூடாக்கவும். கடுகு வெடிக்க விட்டு உளுத்தம் பருப்பு சேர்க்கவும். அடுத்து வர மிளகாய், கருவேப்பிலை சேர்க்கவும்.
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, பெருங்காயம் ஆகியவற்றை தாளித்ததுடன் சேர்க்கவும்.
தாளித்ததை ஓட்ஸுடன் சேர்க்கவும். தேவையான அளவு உப்பு, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை சேர்க்கவும்.
எல்லாவற்றையும் நன்றாக கலந்து விடவும். மாதுளம் பழ முத்துக்கள், விதையில்லா திராட்சை, நறுக்கிய வெள்ளரி துண்டுகள், பொடியாக நறுக்கிய மாங்காய், துருவிய கேரட் அல்லது வறுத்த முந்திரி கொண்டு அலங்கரிக்கவும்.