ஆப்பிள் இலவங்கப்பட்டை ஓட்ஸ்
ஆப்பிள் இலவங்கப்பட்டை ஓட்ஸ் தயாரிப்பதற்கு எளிதானது. ஓட்ஸ் பாயசம் மற்றும் ஓட்ஸ் கஞ்சி எனவும் அழைக்கப்படுகிறது. ஓட்ஸ் மற்றும் ஆப்பிள் ஒரு சுவையான மற்றும் ஆரோக்கியமான காலை உணவு ஆகும்.
ஆப்பிள் இலவங்கப்பட்டை ஓட்ஸ் செய்முறை
ஆப்பிள் இலவங்கப்பட்டை ஓட்ஸ்
Ingredients
- ஓட்ஸ் - 1 கிண்ணம்
- பட்டை பொடி - 1/4 தேக்கரண்டி
- ஜாதிக்காய் பொடி - 1/4 தேக்கரண்டி
- சக்கரை - 2 மேசைக்கரண்டி
- பால் - 1/4 கிண்ணம்
- ஆப்பிள் - 1 (பொடியாக நறுக்கியது)
- தண்ணீர் - 1 கிண்ணம்
Instructions
- ஆப்பிள் துண்டுகளோடு தண்ணீரை கொதிக்கவிடவும்.
- பட்டை பொடி, ஜாதிக்காய் பொடி, சக்கரை, ஓட்ஸ் சேர்த்து 5 நிமிடம் (அடுப்பை குறைத்து) கூழ் பதத்திற்கு வரும் வரை வேக வைக்கவும்.
- பால் சேர்த்து கலக்கவும். தேவைபட்டால் சிறிது தண்ணீர் சேர்க்கவும்.
பரிமாற பரிந்துரைப்பது
- இந்த சத்தான உணவை சூடாக பரிமாற வேண்டும்.
குறிப்பு
- பால் ஒவ்வாமை இருப்பவர்கள் பாலை மட்டும் தவிர்த்துவிட்டு இதை செய்யலாம்.
வேறுபாடாக பரிந்துரைப்பது
- பொடியாக நறுக்கிய பேரிச்சம் பழம், உலர் செர்ரி வகைகள், டியுடி ப்ருட்டி ஆகியவற்றை ஆப்பிளிற்கு பதில் சேர்த்தால் பல்வேறு சுவை கிடைக்கும்.