ஆப்பம் – தேங்காய் சேர்க்காமல்
ஆப்பம் தென்னிந்தியாவில் கேரளாவின் பிரபலமான ஒரு சிற்றுண்டியாகும். தமிழ் நாட்டிலும் பிரசித்தமானது. இது காலை உணவிற்கு கடலை குழம்பு, உருளைகிழங்கு ஸ்டூ, மாட்டிறைச்சி ஸ்டூ அல்லது சிக்கன் ஸ்டூவுடன் பரிமாறப்படுவதாகும். நான் சிறிது நாட்களுக்கு முன்பு வழச்சல் சாலக்குடி அருகில் உள்ள ஊருக்கு சென்ற போது உண்டு மகிழ்ந்தேன்.
ஆப்பம் பொதுவாக அரிசி, தேங்காய், சிறிதளவு ஈஸ்ட், உப்பு, சர்க்கரை சேர்த்து செய்வதாகும். உணவு கட்டுப்பாட்டை எண்ணி நான் தேங்காய் சேர்ப்பதை தவிர்த்துவிடுவேன். இங்கு தேங்காய்க்கு பதிலாக நான் அவல் உபயோகித்துள்ளேன். இன்று சுவையான ஆப்பம் செய்யும் முறையை கற்றுக்கொள்வோம்.
ஆப்பம் - தேங்காய் சேர்க்காமல்
Ingredients
- பச்சரிசி – 1 கிண்ணம்
- அவல் – ½ கிண்ணம்
- உப்பு – ½ தேக்கரண்டி
- சர்க்கரை – 1 தேக்கரண்டி
- ஈஸ்ட் – ½ மேசைக்கரண்டி
Instructions
- அரிசியை அவலுடன் சேர்த்து 5-6 மணி நேரம் ஊறவைக்கவும்.
- நைசாக அரைத்துகொள்ளவும். தோசைமாவு பதத்திற்கு இருக்க வேண்டும்.
- வெதுவெதுப்பான சிறிதளவு தண்ணீரில் ஈஸ்டை போடவும்.
- ஈஸ்ட் ஊறியபின்னர் மாவுடன் கலந்து இரவு முழுவதும் புளிக்கவிடவும். இந்த மாவை நீங்கள் ஆப்பம் செய்ய பயன்படுத்தலாம். குளிர்சாதன பெட்டியில் வைத்தும் உபயோகிக்கலாம்.
- ஆப்பம் தயாரிக்க ½ மணிநேரத்திற்கு முன்னர் சர்க்கரை, உப்பு கலந்துகொள்ள வேண்டும்.
- நான்ஸ்டிக் கடாயில் எண்ணெய் லேசாக ஊற்றி துணி அல்லது பேப்பர் நாப்கினால் தேய்த்துவிட்டு கொள்ளவும்.
- ஒரு கரண்டி மாவை ஊற்றி கடாயை கையில் எடுத்து சுற்றவும்.
- மூடிவைத்து 1 நிமிடம் வேகவிடவும். நடுவில் வெந்துள்ளதா என்று பார்த்து பின்னர் எடுக்கவும்.
பரிமாற பரிந்துரைப்பது
- சூடான ஆப்பத்தை கடலை குழம்பு, உருளைகிழங்கு ஸ்டூ, மாட்டிரைச்சி ஸ்டூ, சிக்கன் ஸ்டூவுடன் பரிமாறவும்.