துருவிய தேங்காயுடன் வடித்த சாதத்தை சேர்த்து மிக்ஸியில் மிருதுவாக அரைத்து கொள்ளவும்.
இதனுடன் ஊறவைத்த அரிசி சேர்த்து அரைக்கவும். மாவு நைசாக இருக்க வேண்டும்.
அரைத்த மாவுடன் ஈஸ்ட், சர்க்கரை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். மாவை இரவு முழுவதும் புளிக்க விடவும். மாவு புளித்தபின்னர் ஈஸ்ட் சேர்ப்பதால் இரண்டு மடங்காகிவிடும்.
இப்போது ஆப்பகல்லில் மாவை ஊற்றி சிறிது எண்ணெய் சேர்க்கவும். சாதாரண கல்லிலும் சுடலாம். ஆப்பகல்லில் ஊற்றுவதாக இருந்தால் மாவை ஊற்றி கல்லின் கைப்பிடியை பிடித்து வட்டமாக சுற்றவேண்டும். சிலருக்கு நடுவில் தடிமனாக மிருதுவாக இருப்பதை விரும்புவார்கள். இதற்கு சற்று அதிகமாக மாவு ஊற்றிக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் மெல்லியதாக வரும்.
மூடிவைத்து 2 நிமிடங்கள் வேகவிடவும். உங்களுக்கு ஓரங்கள் சிவந்து மொறுமொறுப்பாக வேண்டுமானால் மேலும் 2 நிமிடங்கள் வேகவிடவும்.