கலந்த அரிசி மாவு – 1 கிண்ணம்(நான்கு வகை அரிசி சேர்ந்தது - செய்முறை கீழே கொடுத்துள்ளேன்.)
வெங்காயம் – 2-3(பொடியாக நறுக்கியது)
துருவிய தேங்காய் – 1/2 கிண்ணம்
இஞ்சி – 1/ 2 அங்குல துண்டு(பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் – 3(பொடியாக நறுக்கியது)
கருவேப்பிலை – 2 கொத்து(பொடியாக நறுக்கியது)
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் / நெய் – அடை தயாரிக்க தேவையான அளவு
மிதமான சூடுசெய்த தண்ணீர் – 1.5 கிண்ணம்(மாவு தயாரிக்க)
Instructions
ஒரு வாணலியில் நெய் சூடாக்கி வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கருவேப்பிலை, துருவிய தேங்காய் சேர்த்து சில நிமிடங்கள் வதக்கி அடுப்பை அணைக்கவும். இது உங்கள் விருப்பம் வதக்காமலும் இவற்றை சேர்த்து கொள்ளலாம்.
ஒரு பாத்திரத்தில் நான்கு வகை அரிசி மாவு, பச்சரிசி மாவு, வதக்கிய பொருட்கள், உப்பு, கொத்தமல்லி தழை சேர்க்கவும்.
சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து மிருதுவாக பிசைந்து கொள்ளவும். சப்பாத்தி மாவைவிட மிருதுவாக இருக்க வேண்டும்.
பிசைந்த மாவை 5 நிமிடங்கள் மூடி வைக்கவும்.
தோசை கல்லை அடுப்பில் வைத்து மிதமான தீயில் வைக்கவும். எலுமிச்சை அளவு மாவை எடுத்து கொள்ளவும்.
ஒரு வாழை இலை அல்லது பிளாஸ்டிக் கவரில் எண்ணெய் தடவி மாவை அதில் வைத்து கையால் 4-6 விட்டம் வரும் அளவு தட்டவும். பழக்கம் இருந்தால் நேரடியாக தோசை கல்லில் தட்டலாம்.
மெதுவாக தட்டிய அடையை கல்லில் போடவும்.
அடையை சுற்றிலும் எண்ணெய் ஊற்றவும். நடுவில் ஒரு துளை செய்து நடுவிலும் எண்ணெய் ஊற்றலாம். இது அடைக்கு மேலும் மொறுமொறுப்பை கொடுக்கும்.
மிதமான தீயில் வைத்து இருபக்கமும் வேக விடவும். மூடி வைத்து செய்தால் விரைவாக வேகும். சூடாக பரிமாறவும்.