Go Back
Print
Recipe Image
Smaller
Normal
Larger
Print Recipe
கோபி மஞ்சூரியன்
Course:
Snack
Cuisine:
Chinese
Author:
டாலியா டுவிங்கிள்
Ingredients
பகுதி – 1
காலிஃப்ளவர் – 1
(பெரியது)
மைதா மாவு – 2 மேசைக்கரண்டி
கார்ன் பிளவர் – 2 கிண்ணம்
மிளகாய் தூள் – 2 மேசைக்கரண்டி
மிளகு தூள் – 1 தேக்கரண்டி
உப்பு – 1 தேக்கரண்டி
தண்ணீர் – தேவையான அளவு
பகுதி - 2
வெங்காயம் – 1
(நீளவாக்கில் நறுக்கியது)
பூண்டு – 3-4 பற்கள்
(பொடியாக நறுக்கியது)
இஞ்சி – 1 அங்குலதுண்டு
(பொடியாக நறுக்கியது)
வண்ண மிளகாய் - தேவைபட்டால்
பச்சை மிளகாய் – 1 அல்லது 2
தக்காளி சாஸ் – 4 மேசைக்கரண்டி
சில்லி சாஸ் – 1 மேசைக்கரண்டி
சோயா சாஸ் – 3 தேக்கரண்டி
எண்ணெய் – 2 மேசைக்கரண்டி
Instructions
காலிஃப்ளவரை துண்டுகளாக நறுக்கி கொதிக்கும் தண்ணீரில் உப்பு சேர்த்து 5 நிமிடங்கள் வைக்கவும்.
பகுதி 1 ல் குறிப்பிட்டுள்ள பொருட்களை கலந்து கொள்ளவும்.
காலிஃப்ளவர் துண்டுகளை எண்ணெயில் பொரித்து அதிகப்படியான எண்ணெயை பேப்பர் டவளில் வடிய விடவும்.
ஓரு நான்ஸ்டிக் வாணலியில் 2 மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி வெங்காயம், இஞ்சி-பூண்டு சேர்த்து வதக்கவும்.
வண்ண மிளகாய் சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும்.
தக்காளி சாஸ், சில்லி சாஸ், சோயா சாஸ் சேர்த்து கிளறவும்.
இறுதியாக பொரித்துவைத்த காலிஃப்ளவர் துண்டுகளை சேர்க்கவும்.
நன்றாக கலந்து பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள் அல்லது பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை கொண்டு அலங்கரிக்கவும்.
பிரைட் ரைஸ், புலாவ் அல்லது சப்பாத்தியுடன் பரிமாறவும்.