தண்ணீர் – 1.5 கிண்ணம்(கெட்டியான மாவு கரைக்க தேவையான அளவு)
பகுதி - 2
பூண்டு - 3-4(பொடியாக நறுக்கியது)
இஞ்சி - 1 அங்குலம்(பொடியாக நறுக்கியது)
தக்காளி சாஸ் – 3 மேசைக்கரண்டி
சில்லி சாஸ் - 1-2 மேசைக்கரண்டி
சோயா சாஸ் - 3 மேசைக்கரண்டி
அஜினோமோட்டோ – 1 தேக்கரண்டி
எண்ணெய் – 2 மேசைக்கரண்டி
Instructions
பகுதி 1ல் குறிப்பிட்டுள்ள பொருட்களில் பிரக்கோலியை தவிர அனைத்தையும் பஜ்ஜி மாவு பதத்திற்கு கலந்துகொள்ளவும். சிறிதளவு தண்ணீர் சேர்த்துக்கொள்ளவும். இது மாவில் கட்டியில்லாமல் தடுக்கும்.
பிரக்கோலி துண்டுகளை மாவுடன் நன்றாக கலந்து எண்ணெயில் பொரித்து எடுக்கவும். அதிகப்படியான் எண்ணெயை பேப்பர் டவலில் ஒற்றி எடுக்கவும்.
நான்ஸ்டிக் கடாயில் சிறிதளவு எண்ணெயை சூடாக்கி பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு சேர்த்துக்கொள்ளவும். (நீங்கள் விரும்பினால் நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம், குட மிளகாய் இதனுடன் சேர்த்துக்கொள்ளலாம்).
தக்காளி சாஸ், சோயா சாஸ், சில்லி சாஸ், அஜினோமோட்டோ சேர்த்து அனைத்தையும் நன்றாக கலக்கவும்.
இறுதியாக பொரித்துவைத்த பிரக்கோலி துண்டுகளை கலந்து கொள்ளவும்.