மிளகு காளான் மசாலா (மிளகு மஷ்ரூம் மசாலா)
மிளகு காளான் மசாலா ஒரு மிக சுவையான, காரமான பட்டன் காளானில் செய்யப்பட்ட உணவாகும். இது இந்தியாவின் உணவு விடுதிகளில் ஒரு பிரசித்தமான உணவாகும். எனக்கு அந்த மிளகும் பூண்டு கலந்த காளானின் மணம் பிடிக்கும். காளான் இறைச்சிக்கு சமமான அளவு இறுகிய தன்மை உள்ளதால் இதை சைவ உணவு வகைகளின் மட்டன் என்று குறிப்பிடுவர். இது மட்டனைப் போன்ற சுவையில் இருந்தாலும் உடல் நலத்திற்கு மிகவும் சத்துள்ள உணவாகும். மிகுந்த புரத சத்துள்ளதாகும். கொழுப்பு சத்து இல்லாதது ஆகும். கொழுப்பு சத்து அதிகம் உள்ளவர்கள் இதை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். சைவ உணவு உண்ணும் எனது நண்பர்கள் புரத சத்து குறைபாடுள்ளவர்கள் மொச்சை மற்றும் பருப்பு வகைகளை அதிகம் அவர்களின் உணவில் சேர்த்துக் கொண்டாலும் அவர்களுக்கு போதுமான அளவு புரதம் கிடைப்பதில்லை. புரதத்தை அதிகப்படுத்த நீங்கள் சோயா, காளான் போன்றவற்றை தினசரி உணவு வகைகளில் சேர்த்து கொள்ளலாம். இதில் காளான் மிகவும் சிறந்தது.
காளானனின் இறுகிய தன்மையால் சைவ உணவுப்பிரியர்கள் காளானை விரும்புவதில்லை. நீங்கள் முதல் முறையாக காளானை சமைப்பதாக இருந்தால் இதனுடன் உங்களுக்கு விருப்பமான உருளைக்கிழங்கு, அல்லது குடமிளகாய் சேர்த்து சமைக்கவும். மெதுவாக நீங்களும் விரும்பும் காய்கறியாக காளான் மாறிவிடும்.
மிளகு காளான் மசாலா செய்முறை
மிளகு காளான் மசாலா
Ingredients
- காளான் – 1 பாக்கெட்
- வெங்காயம் - 1 பெரியது அல்லது 2 சிறியது
- தக்காளி - 1 பெரியது அல்லது 2 சிறியது
- இஞ்சி - பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
- பூண்டு – 4 பற்கள் இடித்தது
- பச்சை மிளகாய் - 1
- தனியா தூள் – 1 தேக்கரண்டி
- வரமிளகாய் தூள் -1/2 தேக்கரண்டி
- மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
- கரம் மசாலா தூள் - 1 சிட்டிகை
- எண்ணெய் – 1 தேக்கரண்டி
- கடுகு - 1/4 தேக்கரண்டி
- சீரகம் - 1/4 தேக்கரண்டி
- உப்பு - தேவைகேற்ப
- கொத்தமல்லி - 1 கையளவு
பகுதி - 2
- பூண்டு - 4 பற்கள்
- மிளகு – 2 தேக்கரண்டி
- சீரகம் - 1/4 தேக்கரண்டி
Instructions
- காளான், வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை நறுக்கி வைக்கவும்.
- பகுதி-2ல் குறிப்பிட்டுள்ளவற்றை மிக்சியில் அரைத்து கொள்ளவும்.
- வாணலில் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம் தாளிக்கவும்.
- வெங்காயம், கருவேப்பிலை, பச்சை மிளகாயை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
- இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.
- தக்காளி சேர்த்து வதக்கவும்.
- வர மிளகாய் தூள், மஞ்சள் தூள், மிளகு தூள், கரம் மசாலா தூள், தனியா தூள் சேர்த்து வதக்கவும்.
- காளானை சேர்த்து வதக்கவும். வாணலை சிறிது நேரம் மூடி வைத்து காளானில் நீர் வற்றும் வரை வதக்கவும்.
- அரைத்த விழுதை சேர்க்கவும்.
- எலுமிச்சை சாறு சேர்க்கவும். ஒரு நிமிடம் வதக்கி இறக்கவும். காரம் அதிகம் வேண்டுமானால் மிளகு சேர்ககலாம்.
- கொத்தமல்லி சேர்த்து கலந்தால் சுவையான காளான் மிளகு மசாலா தயார்.
விரிவான செய்முறை
காளான், வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை நறுக்கி வைக்கவும்.
பகுதி-2ல் குறிப்பிட்டுள்ளவற்றை மிக்சியில் அரைத்து கொள்ளவும்.
வாணலில் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம் தாளிக்கவும்.
வெங்காயம், கருவேப்பிலை, பச்சை மிளகாயை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும். தக்காளி சேர்த்து வதக்கவும்.
வர மிளகாய் தூள், மஞ்சள் தூள், மிளகு தூள், கரம் மசாலா தூள், தனியா தூள் சேர்த்து வதக்கவும்.
காளானை சேர்த்து வதக்கவும். வாணலை சிறிது நேரம் மூடி வைத்து காளானில் நீர் வற்றும் வரை வதக்கவும்.
அரைத்த விழுதை சேர்க்கவும்.
எலுமிச்சை சாறு சேர்க்கவும். ஒரு நிமிடம் வதக்கி இறக்கவும். காரம் அதிகம் வேண்டுமானால் மிளகு சேர்ககலாம்.
கொத்தமல்லி சேர்த்து கலந்தால் சுவையான காளான் மிளகு மசாலா தயார்.
பரிமாற பரிந்துரைப்பது
- காரசாரமான காளான் மிளகு மசாலாவை சாதம், கலவை சாதம், ரொட்டியுடன் பரிமாறவும்.