சுரைக்காய் குருமா
குர்மா அல்லது குருமாஅல்லது கோர்மா எனப்படுவது நிறைய மாறுபாடான சுவைகளில் தயாரிக்கப்படுகிறது. மொகலாயர்களின் சமையலில் இந்த சுவையான குருமாவிற்கு தயிர் அல்லது பிரஷ் கிரீம் பயன்படுத்துவார்கள். தென்னிந்தியாவில் அதற்கு மாற்றாக அதே சுவை கிடைக்க தேங்காய், முந்திரி அரைத்த விழுது சேர்ப்பார்கள். இந்த செட்டி நாடு வெள்ளை குருமா தென்னிந்திய உணவகங்களில் மிகவும் பிரசித்தமானது. இது பல விதமான சுவைகளில் தயாரிக்கப்படுகிறது. அதில் ஓரு முறையான சுரைக்காய் குருமா செய்முறையை பார்ப்போம். சப்பாத்தியுடன் உண்பது மிகவும் சுவையாக இருக்கும். வெள்ளை சாதத்துடனும் பரிமாறலாம்.
சுரைக்காய் குருமா தயாரிக்கும் முறை
சுரைக்காய் குருமா
Servings: 4 People
Ingredients
- சுரைக்காய் – 250 கிராம் (1/4 கிலோ)
- சீரகம் – 1/2 தேக்கரண்டி
- வெங்காயம் – 1 நடுத்தரமானது (நறுக்கியது)
- இஞ்சி- பூண்டு விழுது – 1/2 தேக்கரண்டி
- தக்காளி – 1 (நறுக்கியது)
- பச்சை மிளகாய் – 2 அல்லது வர மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
- மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
- கொத்தமல்லி தூள் – 1 தேக்கரண்டி
- கரம் மசாலா தூள் – 1/2 தேக்கரண்டி
- உப்பு – சுவைகேற்ப
- எண்ணெய் – 2 தேக்கரண்டி
- கொத்தமல்லி தழை - அலங்கரிக்க
அரைக்க தேவையான பொருட்கள்
- துருவிய தேங்காய் – 3 மேசைக்கரண்டி
- கசகசா – 1 தேக்கரண்டி
Instructions
- சுரைக்காயை கழுவி தோல் சீவி சிறிய துண்டுகளாக நறுக்கவும்.
- வாணலியில் எண்ணெய் சூடாக்கி சீரகம் வெடிக்கவிடவும்.
- நறுக்கிய வெங்காயம் சேர்த்து சில நிமிடங்கள் வதக்கவும்.
- இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
- நறுக்கிய தக்காளி சேர்த்து நன்றாக வத்க்கவும்.
- சுரைக்காய், உப்பு, மஞ்சள் தூள், வர மிளகாய் தூள், கொத்தமல்லி தூள், கரம் மசாலா தூள் சேர்க்கவும்.
- 1 கிண்ணம் தண்ணீர் சேர்த்து மூடிவைத்து சுரைக்காயை நன்றாக வேகவிடவும் (7- 10 நிமிடங்கள்)
- இந்த நேரத்தில் துருவிய தேங்காய், கசகசாவை சிறிதளவு தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் நைசாக அரைத்துகொள்ளவும். இதனுடன் 4-5 முந்திரி சேர்த்து அரைத்தால் சுவை கூடுதலாக இருக்கும்.
- அடுப்பை குறைத்து அரைத்த விழுதை சேர்க்கவும்.
- 2-3 நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைக்கவும். கொத்தமல்லி தழை கொண்டு அலங்கரிக்கவும்
பரிமாற பரிந்துரைப்பது
- சப்பாத்தி அல்லது வெள்ளை சாதத்துடன் பரிமாறலாம்.
வேறுபாடாக பரிந்துரைப்பது
- இதே முறையில் பீர்க்கங்காய், செள செள, சுச்சினி, பூசனிக்காய் குருமா தயாரிக்கலாம்.
- உங்களுக்கு குருமா வெள்ளை நிறமாக வேண்டுமானால் தக்காளி, மஞ்சள் தூள், வர மிள்காய் தூள் சேர்க்க தேவையில்லை. அதற்கு பதிலாக தயிர், பச்சை மிளகாய் சேர்த்து செய்யலாம்.