மாங்காய் இஞ்சி & பச்சை மஞ்சள் மோர்குழம்பு

மாங்காய் இஞ்சி & பச்சை மஞ்சள் மோர்குழம்பு

தென்னிந்திய குழம்பு வகைகளில் மோர் குழம்பு என்பது, தாளித்த மோருடன் சில மசாலா பொருட்கள் சேர்த்து செய்யும் ஒரு குழம்பு வகையாகும். சில மாற்றங்களுடன் வட இந்தியாவில் செய்வதை கடி என்பர். இஞ்சி, பச்சை மிளகாய், சீரகம், மஞ்சள் மோருடன் சேர்த்து அரைத்து செய்வதே மோர் குழம்பு ஆகும். நான் எனது ஆரோக்கியமான மாற்றத்தை இதில் சேர்த்துள்ளேன். மஞ்சள் தூளுக்கு பதிலாக பச்சை மஞ்சள் சேர்த்து அதனுடன் இஞ்சிக்கு பதிலாக மாங்காய் இஞ்சி சேர்த்து செய்துள்ளேன். இது குழம்பிற்கு தனி சுவையை கொடுக்கும். அதனால் இதை விரும்பி உண்பார்கள். ஆகவே தான் இதற்கு மாங்காய் இஞ்சி பச்சை மஞ்சள் மோர் குழம்பு என்று பெயர் வைத்துள்ளேன்.

மற்றும் இவைமூன்றும் வேரில் உள்ள கிழங்கு வகையை சேர்ந்த்தாகும். இந்தியாவில் குளிர் காலத்தில் கிடைக்கும் பொருட்களாகும். இஞ்சி, மஞ்சளின் சத்துக்கள் நாம் அனைவரும் அறிந்ததாகும். மாங்காய் இஞ்சியில் அதே அளவு சத்துக்கள் உள்ளன. இவை அனைத்தும் ஆயுர்வேததில் மருந்துகளாக பயன்படுத்தப்படுகிறது. இந்த தலைமுறையினர் இவற்றை வாங்குவதில்லை ஏனெனில் எப்படி உபயோகிப்பது என்று அவர்களுக்கு தெரிவதில்லை. தழிழ் நாட்டில் பொங்கல் சமயம் இவற்றை அதிகமாக காணலாம். அடுத்தமுறை நீங்கள் இவை கிடைத்தால் இந்த குழம்பை அவசியம் செய்து பாருங்கள். வெள்ளை சாதத்துடன் உண்ண ஏற்றது.

மாங்காய் இஞ்சி & பச்சை மஞ்சள் மோர்குழம்பு தயாரிக்க வீடியோ வழிமுறைகள்

மாங்காய் இஞ்சி & பச்சை மஞ்சள் மோர்குழம்பு செய்முறை

மாங்காய் இஞ்சி & பச்சை மஞ்சள் மோர்குழம்பு

Prep Time10 minutes
Cook Time20 minutes
Total Time30 minutes
Course: Side Dish
Cuisine: Indian
Author: டாலியா டுவிங்கிள்

Ingredients

  • தயிர் – 1.5 கிண்ணம்
  • தண்ணீர் - 1.5 கிண்ணம்
  • துருவிய தேங்காய் – 2 மேசைக்கரண்டி
  • இஞ்சி – 1/2 அங்குல துண்டு
  • மாங்காய் இஞ்சி – 1/2 அங்குல துண்டு
  • பச்சை மஞ்சள் – 1/2 அங்குல துண்டு
  • பச்சை மிளகாய் - 2 அல்லது காரத்திற்கு ஏற்ப
  • சீரகம் -1/2 தேக்கரண்டி
  • உப்பு - ருசிகேற்ப
  • கொத்தமல்லி தழை – ஒரு கையளவு

தாளிக்க தேவையான பொருட்கள்

  • தேங்காய் எண்ணெய் – 1 மேசைக்கரண்டி
  • கடுகு – 1 தேக்கரண்டி
  • பெருங்காயத்தூள் – 1/2 தேக்கரண்டி
  • கருவேப்பிலை – 2 கொத்து
  • வர மிளகாய் - 2

Instructions

  • இஞ்சி, மாங்காய் இஞ்சி, பச்சை மஞ்சள், கருவேப்பிலை, பச்சை மிளகாய், சீரகம் துருவிய தேங்காய் அனைத்தையும் மிக்ஸி ஜாரில் போடவும்.
  • தண்ணீர் சேர்த்து மிருதுவாக அரைத்துகொள்ளவும்.
  • அரைத்த மசாலாவுடன் தயிர் சேர்த்து மிக்சியை ஒரு முறை சுற்றி எடுக்கவும்.
  • உப்பு சேர்த்து தண்ணீர் சிறிதளவு சேர்க்கவும். இதுவே மோர் குழம்பு கலவையாகும். இனி தாளித்தல் மட்டுமே.
  • ஒரு வாணலியில் தேங்காய் எண்ணெய் ஊற்றி கடுகு போடவும். வெடிக்க ஆரம்பித்தவுடன் பெருங்காயம் சேர்த்து வர மிளகாயை கிள்ளி போட்டு கருவேப்பிலை சேர்க்கவும்.
  • அடுப்பை குறைத்து மோர் கலவையை சேர்க்கவும். கைவிடாமல் கிளறிவிடவும். 3-5 நிமிடங்கள் கொதிக்கவிடவும்.
  • பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை சேர்த்து அடுப்பை அனைத்துவிடவும். சுவையான மோர்குழம்பு தயார்.

மாங்காய் இஞ்சி பச்சை மஞ்சள் மோர்குழம்பு தயாரிக்க விரிவான படிமுறைகள்

இஞ்சி, மாங்காய் இஞ்சி, பச்சை மஞ்சள், கருவேப்பிலை, பச்சை மிள்காய், சீரகம் துருவிய தேங்காய் அனைத்தையும் மிக்சி ஜாரில் போடவும்.

துருவிய தேங்காய் குழம்பு கெட்டியாக இருக்க உதவுகிறது. அதற்கு பதில் அரிசி மாவு அல்லது கடலை மாவு உபயோகிக்கலாம். சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்துகொள்ளவும்.

தயிர் சேர்த்து மசாலாவுடன் ஒரு சுற்று சுற்றி எடுத்துகொள்ளவும். சிறிதளவு தண்ணீர், உப்பு சேர்க்கவும். எல்லாவற்றையும் நன்றாக கலந்துவிடவும். இதுவே மோர் குழம்பு கலவையாகும். இனி தாளிக்க வேண்டியது மட்டும்தான்.

ஒரு வாணலியை சூடாக்கி தேங்காய் எண்ணெய் சேர்க்கவும். எண்ணெய் சூடானபின்னர் கடுகு சேர்க்கவும்.

மாங்காய் இஞ்சி & பச்சை மஞ்சள் மோர்குழம்பு செய்முறை

கடுகு வெடிக்க ஆரம்பித்தவுடன் பெருங்காயம், கிள்ளிய வர மிளகாய், கருவேப்பிலை சேர்க்கவும்.

மாங்காய் இஞ்சி & பச்சை மஞ்சள் மோர்குழம்பு செய்முறை

அடுப்பை குறைத்து தயாரித்து வைத்த மோர்குழம்பு கலவையை சேர்க்கவும். கைவிடாமல் கிளறவும். 3-5 நிமிடங்கள் அடுப்பில் வைத்திருக்கவும்.

பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை சேர்க்கவும். அடுப்பை அணைத்துவிடவும். ருசி சரி பார்க்கவும். மோர்குழம்பு பரிமாற தயார்.

மாங்காய் இஞ்சி & பச்சை மஞ்சள் மோர்குழம்பு செய்முறை

மாங்காய் இஞ்சி பச்சை மஞ்சள் மோர்குழம்பு பரிமாற பரிந்துரைப்பது

  • சுவையான மோர்குழம்பை வெள்ளை சாதம் மற்றும் பொரியலுடன் பரிமாறவும்.
  • சப்பாத்தி மற்றும் கிச்சடியுடனும் பரிமாறலாம்.

மாங்காய் இஞ்சி & பச்சை மஞ்சள் மோர்குழம்பு



உங்கள் கருத்துக்களை சமர்ப்பிக்கவும்...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.