பூண்டு வெங்காயம் குழம்பு

பூண்டு வெங்காயம் குழம்பு

பூண்டு, வெங்காயம் குழம்பை பொதுவாக தமிழர்கள் வீடுகளில் அடிக்கடி செய்யும் மிகவும் பிரசித்தமான குழம்பு வகைகளில் ஒன்றாகும். இதை வெந்தயக்குழம்பு என்று கூறுவார்கள். இதற்கு சுட்ட அப்பளம் சேர்த்து சாதத்துடன் பரிமாறுவார்கள். அடிக்கடி செய்யும் குழம்பு வகைகளில் முக்கியமான இடத்தைபிடித்துள்ள ஒன்றாகும்.

பொதுவாக கடைகளில் வாங்கும் பொடி வகைகளை பயன்படுத்துவதை தவிர்த்து முடிந்த அளவு வீட்டிலேயே தயாரித்து உபயோகிப்பது நல்லது. இந்த வகை குழம்புகளுக்கு நல்லெண்ணெய் ஊற்றி தாளித்தால் கூடுதல் சுவை கிடைக்கும். இதற்கென குழம்பு வடகம் தயார்செய்து வைத்துக்கொள்ளலாம். அதைக்கொண்டு தாளித்து செய்தால் மிகுந்த சுவையுடன் இருக்கும்.

பூண்டு வெங்காயம் குழம்பு செய்முறை

பூண்டு வெங்காயம் குழம்பு

Course: Side Dish
Cuisine: Indian
Author: டாலியா டுவிங்கிள்

Ingredients

  • சாம்பார் வெங்காயம் - 8 - 10 (நறுக்கியது)
  • பூண்டு பற்கள் - 12-15
  • புளி – எலுமிச்சை அளவு
  • சாம்பார் பொடி – 3 மேசைக்கரண்டி (ஏதாவது ஒரு பிராண்ட்)
  • உப்பு – தேவையான அளவு

தாளிக்க தேவையான பொருட்கள்

  • நல்லெண்ணெய் – 3 மேசைக்கரண்டி
  • கடுகு – 1/2 தேக்கரண்டி
  • வெந்தயம் – 1/4 தேக்கரண்டி
  • பெருங்காயம் – 1/4 தேக்கரண்டி
  • கருவேப்பிலை - 1 கொத்து

Instructions

  • புளியை வெது வெதுப்பான தண்ணீரில் ஊற வைத்து வடிகட்டி வைக்கவும். (மைக்ரோவேவ் அவனில் வைத்து வடிகட்டிகொண்டால், அதிக நேரம் ஊற வைக்க தேவையில்லை.)
  • ஒரு வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி, கடுகு வெடிக்கவிட்டு, வெந்தயம் போடவும். வெந்தயம் கிரேவிக்கு நல்ல சுவையைக்கொடுக்கும்.
  • பெருங்காயம், கருவேப்பிலை, சாம்பார் வெங்காயம், பூண்டு பற்கள் சேர்க்கவும்.
  • அடுப்பை குறைத்து வைத்து சில நிமிடங்கள் வதக்கவும்.
  • சாம்பார் பொடி சேர்த்து மேலும் சிறிது நேரம் வதக்கவும்.
  • வடிகட்டி வைத்த புளிக்கரைசலை சேர்த்து தேவையான அளவு தண்ணீரும், உப்பும் சேர்க்கவும்.
  • நன்றாக கொதிக்கவிடவும். அடுப்பை குறைத்து வைத்து எண்ணெய் மேலே பிரிந்து வரும் வரை கொதிக்கவிடவும்.

பரிமாற பரிந்துரைப்பது

  • சாதம், பொரியலுடன் பரிமாறவும். சப்பாத்தியுடனும் பரிமாறலாம்.

மாறுபாடாக பரிந்துரைப்பது

  • கடைகளில் வாங்கும் சாம்பார் பொடிக்கு பதிலாக நாம் வீட்டிலேயே தயார் செய்து கொள்ளலாம். கடலை பருப்பு 1 மேசைக்கரண்டி, 1 மேசைக்கரண்டி கொத்தமல்லி விதை (தனியா), ½ மேசைக்கரண்டி மிளகு, 5-7 வர மிளகாய் அனைத்தையும் எண்ணெய் சேர்க்காமல் வறுத்துக்கொள்ளவும். மிக்ஸியில் அரைத்து கிரேவியில் சேர்க்கலாம். கடையில் வாங்கும் பொடியைவிட நல்ல சுவையில் இருக்கும். ஆனால் வேலைக்கு செல்லும் தாய்மார்களுக்கு கடைகளில் கிடைக்கும் நல்ல பிராண்ட் பொடிகளே ஏற்றது.


உங்கள் கருத்துக்களை சமர்ப்பிக்கவும்...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.