Go Back
Print
Recipe Image
Smaller
Normal
Larger
Print Recipe
பூண்டு வெங்காயம் குழம்பு
Course:
Side Dish
Cuisine:
Indian
Author:
டாலியா டுவிங்கிள்
Ingredients
சாம்பார் வெங்காயம் - 8 - 10
(நறுக்கியது)
பூண்டு பற்கள் - 12-15
புளி – எலுமிச்சை அளவு
சாம்பார் பொடி – 3 மேசைக்கரண்டி
(ஏதாவது ஒரு பிராண்ட்)
உப்பு – தேவையான அளவு
தாளிக்க தேவையான பொருட்கள்
நல்லெண்ணெய் – 3 மேசைக்கரண்டி
கடுகு – 1/2 தேக்கரண்டி
வெந்தயம் – 1/4 தேக்கரண்டி
பெருங்காயம் – 1/4 தேக்கரண்டி
கருவேப்பிலை - 1 கொத்து
Instructions
புளியை வெது வெதுப்பான தண்ணீரில் ஊற வைத்து வடிகட்டி வைக்கவும். (மைக்ரோவேவ் அவனில் வைத்து வடிகட்டிகொண்டால், அதிக நேரம் ஊற வைக்க தேவையில்லை.)
ஒரு வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி, கடுகு வெடிக்கவிட்டு, வெந்தயம் போடவும். வெந்தயம் கிரேவிக்கு நல்ல சுவையைக்கொடுக்கும்.
பெருங்காயம், கருவேப்பிலை, சாம்பார் வெங்காயம், பூண்டு பற்கள் சேர்க்கவும்.
அடுப்பை குறைத்து வைத்து சில நிமிடங்கள் வதக்கவும்.
சாம்பார் பொடி சேர்த்து மேலும் சிறிது நேரம் வதக்கவும்.
வடிகட்டி வைத்த புளிக்கரைசலை சேர்த்து தேவையான அளவு தண்ணீரும், உப்பும் சேர்க்கவும்.
நன்றாக கொதிக்கவிடவும். அடுப்பை குறைத்து வைத்து எண்ணெய் மேலே பிரிந்து வரும் வரை கொதிக்கவிடவும்.