பாகற்காய் தீயல்
பாகற்காய் தீயல் என்பது கேரளாவின் பாரம்பரிய உணவாகும். பாகற்காய் துண்டுகளுடன் புளி, வறுத்த அரைத்த தேங்காய் விழுது சேர்த்து செய்யும் ஒரு குழம்பாகும். இது வறுத்த தேங்காயின் மனத்துடன் ஒருவித தனி சுவையாக இருக்கும். புளி,தேங்காய் சேர்ப்பதால் பாகற்காயின் கசப்பு தன்மை குறைந்து பாகற்காயை விரும்பாதவர்களும் விரும்பி உண்ணும்படி இருக்கும்.
பாகற்காய் தீயல்
Ingredients
- பாகற்காய் – 2 பெரியது அல்லது 3- சிரியது
- சாம்பார் வெங்காயம் – 5 (நறுக்கியது)
- பூண்டு - 5 பற்கள் (நறுக்கியது)
- புளி – எலுமிச்சை அளவு
- துருவிய தேங்காய் – ½ கிண்ணம்
- கொத்தமல்லி தூள் – 3 தேக்கரண்டி
- வரமிளகாய் தூள் – 2 தேக்கரண்டி (ருசிகேற்ப)
- மஞ்சள் தூள் - ¼ தேக்கரண்டி
- கடுகு – ½ தேக்கரண்டி
- வெந்தயம் – ½ தேக்கரண்டி
- கருவேப்பிலை – 1 கொத்து
- தேங்காய் எண்ணெய் – 2 மேசைக்கரண்டி
Instructions
- புளியை வெதுவெதுப்பான தண்ணீரில் ஊற வைக்கவும். மற்றவைகளை தயார் செய்வதற்குள் ஊறிவிடும்.
- பாகற்காயை துண்டுகளாக அல்லது வட்டமாக நறுக்கிக்கொள்ளவும்.
- எண்ணெய் சேர்க்காமல் துருவிய தேங்காய், வெங்காயம், பூண்டு அனைத்தையும் பிரவுன் கலர் ஆகும் வரை வறுத்துக்கொள்ளவும். 10 நிமிடங்கள் ஆகும்.
- ஆறிய பின்னர் மிக்ஸியில் நைசாக அரைத்துகொள்ளவும்.
- வாணலியில் எண்ணெய் சூடாக்கி கடுகு, வெந்தயம், கருவேப்பிலை தாளிக்கவும்.
- நறுக்கிய பாகற்காயை சேர்த்து 8-10 நிமிடங்கள் வதக்கவும். இப்படி வதக்குவதால் பாகற்காயில் உள்ள கசப்பு தன்மை குறையும்.
- கொத்தமல்லி தூள், வர மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து 30 விநாடிகள் வதக்கவும்.
- ஊற வைத்த புளியை வடிகட்டி அதில் சேர்த்து அரைத்த விழுதை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி உப்பு போடவும்.
- குழம்பு கொதிக்க ஆரம்பித்தவுடன் அடுப்பை குறைத்து 15-20 நிமிடங்கள் மேலே எண்ணெய் பிரிந்து வரும் வரை கொதிக்கவிடவும்.
பரிமாற பரிந்துரைப்பது
- வெள்ளை சாதத்துடன், பப்படத்துடன் பரிமாறவும்.
- சப்பாத்தி, இட்லி, தோசையுடனும் பரிமாறலாம்.