ஒரு வாணலியில் எல்லாவற்றையும் சேர்த்து அடுப்பில் வைத்து ஒட்டாமல் வரும்வரை கிளறவும்.
ஆறிய பின்னர் உங்களுக்கு விருப்பமான அளவில் (பெரிய அல்லது சிறிய) உருண்டைகளாக உருட்டி வைக்கவும். சுமார் 25 உருண்டைகள் வரும்.
மேல்மாவு செய்முறை
அரிசி மாவில் சாதாரண தண்ணீர் சேர்த்து கலக்கவும்.
ஒரு வாணலியில் இதை போட்டு என்ணெய், உப்பு சேர்க்கவும்.
அடுப்பில் குறைந்த தீயில் வைத்து கிளறவும்.
கைவிடாமல் கிளறவும். வாணலியில் ஒட்டாமல் பந்து போல சுருண்டு வரும்.
அந்த மாவை ஒரு தட்டில் மாற்றி 10 நிமிடங்கள் மூடி வைக்கவும்.
கையில் எண்ணெய் தடவி கொண்டு மாவை நன்றாக பிசைந்து சிறிய உருண்டைகளாக்கவும்.
ஒரு உருண்டையை எடுத்து கையில் வைத்து விரலால் தட்டி கிண்ணம் போன்று செய்யவும்.
தயாரித்து வைத்த தேங்காய் பூரணத்தை 1 ஸ்பூன் அளவு உள்ளே வைக்கவும். கிண்ணம் போல உள்ள மாவை மூடவும். உருண்டையாகவோ அல்லது படத்தில் உள்ளவாறு செய்து கொள்ளவும்.
செய்து வைத்த கொழுக்கட்டைகளை ஆவியில் 5-7 நிமிடங்கள் இட்லி பாத்திரம் அல்லது ஸ்டீமரில் வேக வைக்கவும். வெந்த பின்னர் மூடியை திறந்து ஆறவைத்து பின்னர் கொழுக்கட்டைகளை எடுக்கவும். (மோதகம்)