Go Back
Print
Recipe Image
Smaller
Normal
Larger
Print Recipe
சமோசா
Course:
Snack
Cuisine:
Indian
Author:
டாலியா டுவிங்கிள்
Ingredients
டொர்டிலா/ ஸ்ப்ரிங்க் ரோல் சீட்ஸ் - 4
உருளைக்கிழங்கு - 2
(வெட்டி வேக வைத்தவை)
கேரட் - 1
(பொடியாக நறுக்கி வேக வைத்தது)
பச்சை பட்டாணி - 1 கிண்ணம்
கொத்தமல்லி இலை - கையளவு
(நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2
சீரகம் - ¼ தேக்கரண்டி
இஞ்சி-பூண்டு விழுது -1 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
தனியா தூள் - 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
முந்திரி பருப்பு - 6-7
எலுமிச்சை - 1/2
உப்பு - தேவைக்கேற்ப
Instructions
வாணலில் எண்ணெய் சூடான பின், சீரகம், இஞ்சி-பூண்டு விழுது, பச்சை மிளகாய், முந்திரி பருப்பு சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.
வேக வைத்த உருளை துண்டுகள், கேரட், பச்சை பட்டாணி, உப்பு, மிளகாய் தூள், தனியா தூள், மஞ்சள் தூள், கொத்தமல்லி சேர்க்கவும்.
2 நிமிடங்கள் ஆன பின் எலுமிச்சை பிளிந்து கிளறவும். தற்போது சுவையான பூரணம் தயார்.
வெளிபுறம் மூடுதலிற்கு டொர்டிலாவை இரண்டாக வெட்டவும்.
கூம்பு வடிவில் டொர்டிலாவை உருட்டி, பூரணத்தை அதில் நிரப்பவும்.
முட்டை அல்லது தண்ணீர் துளிகள் தொட்டு ஓரங்களை ஒட்டி மூடவும்.
வாணலில் பொரிக்குமளவு எண்ணெய் ஊற்றி, எண்ணெய் நன்றாக சூடான பின் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
அதிகப்படியான எண்ணெயை டிஸ்சு தாளில் ஒத்தி எடுத்து தக்காளி சாஸ்/ புதினா சட்னி உடன் பரிமாறவும்.