பாவ் பாஜி
எனக்கு திருமணமான புதிதில் எனது கணவரின் தங்கை குடும்பத்தினர் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை கொண்டாட வந்திருந்தார்கள். அவர்களின் பெண் குழந்தைகள் எதை கேட்டாலும் எப்பொழுதும் நான் மறுக்கமாட்டேன். வெளியில் சென்று நிறைய பொருட்கள் வாங்கவும், அருகிலுள்ள மலைபிரதேசங்கள் செல்ல என்று 10 நாட்கள் விரைவாக கழிந்துவிட்டது. தினமும் அவர்களுக்கு பிடித்தமான உணவுகளை மதிய உணவு, இரவு உணவு அல்லது மாலை நேர சிற்றுண்டி என்று அவர்கள் வீட்டில் அடிக்கடி செய்யாதவற்றை செய்து கொடுப்பேன். அதில் மிக முக்கியமானது இன்று வரை விரும்பி உண்பது பாவ் பாஜியாகும்.
பாவ் பாஜி என்பது தெருவோரங்களில் விற்கப்படும் ஓரு உணவாகும். பூர்வீகமாக இது மஹாராஷ்ராவை சேர்ந்த உணவாகும். தற்போது இந்தியா முழுவதும் சிறிய ஊர்களிலும் கிடைக்கிறது. பாவ் என்பது ஓரு வகை பன் மொறுமொறுப்பாக வெண்ணெய் சேர்த்து டோஸ்ட் செய்து பாஜியுடன், கெட்டியான காய்கறிகள் சேர்ந்த குழம்புடன், பரிமாறப்படுவதாகும். நாம் பாஜியில் தனியாக பாவ் பாஜி மசாலா தயாரித்து இதற்கு பயன்படுத்த வேண்டும். அதிகமானோர் கடைகளில் கிடைக்கும் பாவ் பாஜி மசாலாவை வாங்கி செய்வார்கள். இந்த மசாலாவை நாம் வீட்டிலும் தயாரிக்கலாம். நான் இதில் பாவ் பாஜி மசாலாவை வீட்டில் தயாரிக்கும் முறையை பகிர்ந்துள்ளேன்.
பொதுவாக பாவ் பாஜி இரும்பு தோசைகல்லில் தயாரிக்கப்படும். காய்கறிகளை வேகவைத்து மசித்து மசாலா பொருட்கள் சேர்த்து செய்வதாகும்.
பாவ் பாஜி செய்முறை
பாவ் பாஜி
Ingredients
- உருளைகிழங்கு – 2 (பெரியது)
- காய்கறிகள் – 2 கிண்ணம் (உங்களிடம் வீட்டில் உள்ள காய்கறிகள். மேலும் இவற்றை சேர்த்துகொள்ளலாம் - கேரட், காலிஃப்ளவர், பீட்ரூட், முட்டைகோஸ், முள்ளங்கி, கத்திரிக்காய், குடமிளகாய், பீன்ஸ் மற்றும் பல.)
- பச்சை பட்டாணி – 1/4 கிண்ணம்
- வெங்காயம் – 1 (நறுக்கியது)
- தக்காளி – 3-4 (மசித்தது)
- பச்சை மிளகாய் – 2
- இஞ்சி, பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
- பாவ் பாஜி மசாலா – 2 மேசைக்கரண்டி
- எலுமிச்சை சாறு – 1 மேசைக்கரண்டி
- வெண்ணெய் – 3-4 மேசைக்கரண்டி
- கொத்தமல்லி தழை - அலங்கரிக்க
- வெங்காயம் – 1/2 (பொடியாக நறுக்கியது)
- எலுமிச்சை துண்டுகள் - அலங்கரிக்க
Instructions
செய்முறை
- ஒரு குக்கரில் வெங்காயம், உருளை கிழங்கு, காய்கறிகள், பச்சை பட்டாணி, பச்சை மிளகாய், 1 கிண்ணம் தண்ணீர் சேர்த்து 2-3 விசில்கள் விடவும்.
- ஆறிய பின்னர் எல்லாவற்றையும் உருளை கிழங்கு மசிக்கும் மத்து அல்லது ஸ்பூனின் அடிபாகத்தால் நன்றாக மசித்துகொள்ளவும்.
- அடி அகலமான வாணலியில் வெண்ணெய் சேர்த்து இஞ்சி, பூண்டு விழுது சேர்க்கவும். தக்காளி சேர்த்து 8-10 நிமிடங்கள் வேகவிடவும்.
- பாவ் பாஜி மசாலா சேர்த்து மசித்த காய்கறி கலவையை சேர்த்து எலுமிச்சை சாறு சேர்க்கவும்.
- கெட்டியான பதம் வரும்வரை வைக்கவும்.
- நறுக்கிய வெங்காயம், எலுமிச்சை துண்டுகள், வெண்ணெய், கொத்தமல்லி தழை கொண்டு அலங்கரிக்கவும். சூடான பாவ் பன், பர்கர் பன், ஹாட் டாக் பன் அல்லது வெள்ளை பன்னுடன் பரிமாறவும்.
பாவ் பாஜி மசாலா வீட்டில் தயாரிக்கும் முறை
- எண்ணெய் சேர்க்காமல் 7 வர மிளகாய் , 4 மேசைக்கரண்டி கொத்தமல்லி (தனியா), 1/4 மேசைக்கரண்டி கருப்பு மிளகு, 3 கிராம்பு, 4 ஏலக்காய் சேர்த்து வாணலியில் பிரவுன் கலராகும் வரை குறைந்த தீயில் வறுக்கவும்.
- வறுக்கும் போது நல்ல மணம் வரும். பின்னர் காய்ந்த மாங்காய் பொடி சேர்த்து சில நிமிடங்கள் வறுத்து அடுப்பை அணைக்கவும்.
- வறுத்த மசாலா நன்றாக ஆறிய பின்னர் மிக்ஸியில் நைஸாக அரைத்து கொள்ளவும்.
வேறுபாடாக பரிந்துரைப்பது
- சீஸ் பாவ் பாஜி – பாஜியின் மேல் சீஸ் போட்டு பரிமாறுவது.
- பன்னீர் பாவ் பாஜி – பாஜியின் மேல் பன்னீர் சீஸ் போட்டு பரிமாறுவது.
- மஷ்ரூம் பாவ் பாஜி – பாஜியில் மஷ்ரூம் சேர்த்து பரிமாறுவது.
- ஜெயின் பாவ் பாஜி – வெங்காயம், பூண்டுடன் உருளைகிழங்குக்கு பதில் வாழைபழம் சேர்த்து பரிமாறுவது.