பிரக்கோலி கேரட் மசாலா வடை
பொரித்த மொறுமொறுப்பான வடை , பஜ்ஜிகள் தான் தமிழ் நாட்டின் பெரும்பாலான கேண்டீன் மற்றும் உணவு விடுதிகளில் விற்பனை செய்யப்படுகின்றன. வீடுகளில் தயாரிப்பதையும் மக்கள் விரும்புகிறார்கள். ஏன் இதில் சத்துள்ள காய்கறிகள் சேர்த்து வடை தயாரிக்க கூடாது? சில கடைகளில் வடை தயாரிக்கும் போது கீரை சேர்த்து செய்வார்கள். இதை கீரை வடை என்று அழைப்பர். நான் இன்று பிரக்கோலி, கேரட்டை வடை மாவுடன் கலந்து செய்யப்போகிறேன். இந்த பாரம்பரியமான வடை கடலை பருப்பில் செய்வதாகும். நான் இதில் மூன்று வகையான பருப்பு வகைகளை சேர்த்து செய்கிறேன். சுவையானது மட்டுமல்லாமல் சத்துள்ளதாகவும் இருக்கும் இந்த வடை எண்ணெயில் பொரிப்பதால் விரும்பி உண்ணும்படி இருக்கும். எல்லாவித பருப்புகளும் சேர்வதால் மிகவும் சத்து நிறைந்ததாக இருக்கும். மேலும் காய்கறிகள் சேர்ந்துள்ளதால் குழந்தைகளுக்கு காய்களும் சேர்த்தால் போலவும் இருக்கும். எனது தோழி கர்ப்பமாக இருக்கும்போது விதவிதமான காய்கள் சேர்த்து வடைதயாரித்து எல்லா சத்துக்களும் கிடைக்கும்படி பார்த்துகொள்வாள். நீங்களும் செய்து உண்டு மகிழுங்கள்.
பிரக்கோலி கேரட் மசாலா வடை
Ingredients
- கடலை பருப்பு – 1 கிண்ணம்
- பாசி பருப்பு – 1/ 4 கிண்ணம்
- துவரம் பருப்பு – 1/ 4 கின்ணம்
- பிரக்கோலி துண்டுகள் – 1 கிண்ணம் (பொடியாக நறுக்கியது அல்லது துருவியது)
- கேரட் – 1/ 2 கிண்ணம் (துருவியது)
- பூண்டு – 4 பற்கள்
- இஞ்சி – 1 அங்குல துண்டு
- பச்சை மிளகாய் – 3- 4 (பொடியாக நறுக்கியது)
- பெருஞ்சீரகம் (சோம்பு) – 2 தேக்கரண்டி
- மஞ்சள் தூள் – 1/ 8 தேக்கரண்டி
- பெருங்காயம் – 1/ 8 தேக்கரண்டி
- கருவேப்பிலை – 10 (பொடியாக நறுக்கியது)
- உப்பு – ருசிக்கேற்ப
- எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு
Instructions
- ஒரு பாத்திரத்தில் எல்லா பருப்புகளையும் கழுவி போதுமான அளவு தண்ணீர் சேர்த்து 1 மணி நேரம் ஊறவைக்கவும்.
- தண்ணீரை வடித்துவிட்டு மிக்ஸியில் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், மஞ்சள் தூள், மற்றும் உப்பு சேர்த்து கொரகொரப்பாக தண்ணீர் சேர்க்காமல் அரைக்கவும்.
- அதே நேரத்தில் காய்கறிகளையும் நறுக்கி கொள்ளவும். நான் ஃபுட் பிராஸசர் கொண்டு பிரக்கோலி, கேரட்டை பொடியாக நறுக்க பயன்படுத்திகொள்வேன். நீங்கள் கத்தியால் பொடியாக நறுக்கிகொள்ளலாம்.
- அரைத்த பருப்பை ஓரு பாத்திரத்தில் போடவும். பொடியாக நறுக்கிய காய்கள், பெருங்காயம், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை, பெருஞ்சீரகம் சேர்க்கவும். கையால் நன்கு கலந்துவிடவும்.
- வாணலியில் எண்ணெய் சூடாக்கவும்.
- சிறிய அளவு மாவு எடுத்து இடது கையில் நடுவில் வைத்து வலது கையில் உள்ளங்கையால் அழுத்தி வடையாக தட்டி கொள்ளவும்.
- தட்டிய வடைகளை எண்ணெயில் போட்டு பிரவுன் நிறமாக மாறும் வரை மொறுமொறுப்பாக பொரித்து எடுக்கவும்.
பரிமாற பரிந்துரைப்பது
• மொறுமொறுப்பான வடைகளை மாலையில் மசாலா டீ அல்லது காபியுடன் பரிமாறவும்.
• சாம்பார் அல்லது ரசம் சாதத்துடன் பரிமாறலாம்.