கிழங்கின் இரண்டு முனைகளையும் வெட்டவும். 2-3 அங்குல துண்டுகளாக நீளவாக்கில் வெட்டிகொள்ளவும். இது சுலபமாக தோல் நீக்க உதவும்.
ஒவ்வொரு துண்டிலும் உள்ள தோலை நீக்கவும். மரவள்ளிகிழங்கு மேலே மெல்லிய பிரவுன் கலர் தோலும் அடுத்து லைட் ரோஸ் கலரில் கெட்டியான தோலும் இருக்கும். இந்த இரண்டு தோலையும் நீக்கிய பின்னர் வெள்ளையான கிழங்கு இருக்கும். எனது பாட்டி தோலின் மேலே லேசாக கீறி கத்தியால் தோலை நீக்கிவிடுவார்கள். மரவள்ளிகிழங்கு புதியதாக இருந்தால் தோல் எளிதில் கிழங்கில் இருந்து நீக்கவரும்.
இன்னொரு முறையில் கிழங்கை காய்கறி நறுக்கும் பலகையில் நேராக வைத்து கூரான கத்தியால் தோலை நீக்கலாம்.
தோலை உரித்தபின்னர் கிழங்கை 4-5 அங்குல துண்டுகளாக வெட்டிகொள்ளவும். வெட்டும்போது நடுவில் உள்ள வேர் பகுதியை நீக்கிவிடவும். பெரிய துண்டுகள் வேகவைக்க சரியாக இருக்கும். நீங்கள் பொரியல் போன்று தயாரிக்க வேண்டுமானால் கிழங்கை மசித்து கொள்ளவும். அல்லது சிறிய துண்டுகளாக நறுக்கிகொள்ளவும்.
நறுக்கிய கிழங்கை குளிர்ந்த நீரில் 3-4 முறை அதில் உள்ள மண் போகும்வரை கழுவிகொள்ளவும். கழுவிய கிழங்கு வெள்ளையாக இருக்கும். இது தற்போது சமைக்க தயார்.
மரவள்ளிகிழங்கு சமைப்பது எப்படி?
நறுக்கிய மரவள்ளிகிழங்கு துண்டுகளை ஒரு பெரிய பாத்திரத்தில் அல்லது பிரஷர் குக்காரிலெடுத்துகொள்ளவும்.
தண்ணீரை பாத்திரத்தில் கிழங்கு முழுவதும் மூழ்கி அதற்கும் மேலே 2-3 அங்குலத்திற்கு இருக்குமாறு வைத்துகொள்ளவும். மாவு சத்து அதிகமுள்ள கிழங்குவகையானதால் தண்ணீர் அதிகமாக வைத்து சமைக்க வேண்டும்.
1 தேக்கரண்டி உப்பு சேர்க்கவும்.
அடுப்பில் தண்ணீரை வைத்து கொதிக்க விடவும். கிழங்கை சேர்த்து அடுப்பை குறைத்து 10-15 நிமிடங்கள் கிழங்கு நன்றாக வேகும் வரை வைக்கவும். பிரஷர் குக்கரில் வைப்பதாக இருந்தால் மூடியை மூடி 2 விசில்கள் விடவும். அடுப்பை அணைத்து குக்கரை இறக்கவும்.