முந்திரி பகோடா
குளிர் காலங்களில் அல்லது மழை காலங்களில் மாலை நேரத்தில் கொரிப்பதற்கு காரமான மொறுமொறுப்பான சிற்றுண்டி இருந்தால் நன்றாக இருக்கும் என எண்ணாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். அதிலும் வெளியில் சென்று வாங்கிவருவதைவிட வீட்டில் செய்து கொடுத்தால் உண்ண நன்றாக இருக்கும். அதுவும் முந்திரியில் செய்தால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். பெரியவர்களுக்கும் தான். முந்திரி பருப்பு இல்லாவிட்டால் அதற்கும் கவலைப்பட வேண்டாம். நிலக்கடலை இருந்தாலும் போதுமானதே. கடைகளில் அதிக விலை கொடுத்து வாங்கும் இந்த முந்திரி பகோடாவை எளிதாக வீட்டில் தயாரிக்க கற்றுகொண்டால் விரும்பிய நேரத்தில் செய்து கொடுத்து குடும்பத்தினரை மகிழ்விக்கலாம். முயற்சித்து பாருங்கள்.
முந்திரி பகோடா
Ingredients
- முந்திரி பருப்பு - 1.5 கிண்ணம் (வறுத்தது- கடலை மசாலா செய்ய நிலகடலை -1.5 கிண்ணம்)
- கடலை மாவு – 1/ 2கிண்ணம்
- அரிசி மாவு – 4 மேசைக்கரண்டி
- பூண்டு – 5 பற்கள்
- வர மிளகாய் – 5
- மிளகு தூள் – 1/ 2 தேக்கரண்டி
- மஞ்சள் தூள் – 1/ 2 தேக்கரண்டி
- கருவேப்பிலை – 1 கொத்து (தேவைபட்டால்)
- உப்பு – 1 தேக்கரண்டி
- தண்ணீர் – 1 கிண்ணம் (தேவையான அளவு)
- எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு
Instructions
- நீங்கள் கடைகளில் கிடைக்கும் வறுத்த முந்திரியை பயன்படுத்தலாம். அல்லது வீட்டிலும் வறுத்துகொள்ளலாம்.
- பூண்டு பற்கள், வர மிளகாய் இரண்டையும் தண்ணீரில் 15 நிமிடங்கள் ஊறவைக்கவும்.
- ஊறவைத்த தண்ணீர் சேர்த்து பூண்டு, வர மிளகாயை அரைத்துகொள்ளவும்.
- அரைத்தவிழுது, கடலை மாவு, அரிசி மாவு, மஞ்சள் தூள், மிளகு தூள், உப்பு அனைத்தையும் சேர்த்து கலந்துகொள்ளவும். தண்ணீர் சேர்க்க தேவையில்லை.
- இறுதியாக முந்திரி சேர்த்து கலக்கவும். மசாலா முந்திரி ஒட்டி இருக்குமாறு மேல் முழுவதும் இருக்குமாறு கலந்து கொள்ளவும்.
- அதே நேரத்தில் ஒரு வாணலியில் பொரிக்க தேவையான எண்ணெய் சூடாக்கவும்.
- கையில் கலந்துள்ள முந்திரி மசாலாவை எடுத்து முந்திரி தனித்தனியாக விழும்படி எண்ணெயில் போடவும்.
- பொன்னிறமாகும் வரை வறுக்கவும். எண்ணெயில் இருந்து எடுத்து வடியவிட்டு பேப்பர் டவலில் போடவும்.
- நீங்கள் இதை அதிக அளவிலும் செய்து காற்றுபுகாத பாத்திரத்தில் வைத்து ஒரு மாதம் வரை உபயோகிக்கலாம். மாலை நேரத்தில் டீயுடன் அல்லது மழை நேரத்தில் அல்லது ஏதேனும் சினிமா பார்க்கும் நேரம் என எப்போது வேண்டுமானாலும் சுவைத்து மகிழலாம்.
வேறுபாடாக பரிந்துரைப்பது
- முந்திரிக்கு பதிலாக நிலக்கடலை பயன்படுத்தி நிலக்கடலை பக்கோடா இதே முறையில் தயாரிக்கலாம்.
- பூண்டு, மிளகாய் ஊறவைத்து அரைப்பதற்கு பதில் 1 தேக்கரண்டி பூண்டு பொடி, 1 தேக்கரண்டி மிளகாய் தூள் சேர்த்துகொள்ளலாம்.