முழு கோழி வறுவல்

முழு கோழி வறுவல்

முழு கோழி வறுவல் மிகவும் சுலபமாக வீட்டில் தயாரிக்க கூடிய உணவு வகையில் ஒன்றாகும். இதை செய்து பழகி கொண்டால் இரவு உணவில் மேஜையை நேர்த்தியாக அலங்கரிக்க நிச்சயம் கைகொடுக்கும். இதை சோர்வடையாமல் எளிதாக தயாரிக்கலாம். ஆனால் சுவையான முழுகோழி வறுவலை சுவைத்து மகிழலாம்.

முழுக்கோழி வறுவல் தயாரிக்க சிறிதளவு தயாரிப்பு நேரம் போதுமானதாகும். இவ்வாறு வறுப்பது கறியை சாறு நிறைந்து மொறுமொறுப்பாக்குகிறது. கன்வெக்ஷன் அவனில் பேக்கிங் பாத்திரம் வைத்து தயாரிப்பேன். நீங்கள் உருளைகிழங்கு, கேரட், டர்னிப், வேர்வகை காய்கறிகள் பயன்படுத்தி தயாரிக்கலாம். முழுகோழி வறுவலை காய்கறிகளுடன் சேர்த்து சுவைக்க எளிய வழி இதுவாகும்.

இது நிச்சயம் நீங்கள் தயாரித்து சுவைக்க வேண்டிய உணவு வகைகளில் ஒன்றாகும்.

முழு கோழி வறுவல் தயாரிப்புமுறை

முழு கோழி வறுவல்

Prep Time30 minutes
Cook Time1 hour 30 minutes
Course: Main Course, Side Dish
Cuisine: American
Servings: 4 People
Author: டாலியா டுவிங்கிள்

Ingredients

கோழியை தயார் செய்ய தேவையான பொருட்கள்

  • முழு கோழி – 1
  • பூண்டு – 3 பற்கள் தட்டியது
  • ரோஸ்மேரி உலர்ந்தது – 1 மேசைக்கரண்டி
  • உப்பு சேர்க்காத வெண்ணெய் – 3 மேசைக்கரண்டி
  • பொடித்த கருப்பு மிளகு தூள் – 1 தேக்கரண்டி
  • உப்பு – சுவைக்கேற்ப
  • மிளகு – சுவைக்கேற்ப
  • எலுமிச்சை – 1

உருளைகிழங்கை தயார் செய்ய தேவையானவை

  • உருளைகிழங்கு – 4 பெரியது அல்லது 15 சிறிய உருளைகிழங்கு
  • ரோஸ்மேரி உலர்ந்தது – 2 தேக்கரண்டி அல்லது 1 மேசைக்கரண்டி உலர வைக்காதது
  • பூண்டு – 1
  • உப்பு – 1/2 தேக்கரண்டி
  • மிளகு – 1/4 தேக்கரண்டி
  • ஆலிவ் எண்ணெய் – 2 மேசைக்கரண்டி

Instructions

  • மைக்ரோவேவ அவனை 425 டிகிரி ஃபாரன்ஹீட் அளவுக்கு சூடுபடுத்தவும்.
  • உருளைகிழங்கை கழுவி ஒரு டவளால் நன்றாக துடைத்து கொள்ளவும். பெரிய உருளைகிழங்கை உபயோகித்தால் பெரிய துண்டுகளாக வெட்டிகொள்ளவும். சிறிய உருளைகிழங்காக இருந்தால் ஃபோர்கால் குத்தி வைத்து கொள்ளவும்.
  • ஒரு பெரிய பாத்திரத்தில் உருளைகிழங்கை போட்டு அதில் ஆலிவ் எண்ணெய் , உப்பு, மிளகு , ரோஸ்மேரி போட்டு கலந்து கொள்ளவும்.
  • பூண்டை நறுக்கி சேர்க்கவும்.
  • ஒரு அகலமான பாத்திரத்தில் ஆலிவ் எண்ணெய் சிறிதளவு தடவவும். கலந்து வைத்த உருளைகிழங்கை அதில் சம்மாக பரத்தி வைக்கவும்.
  • கோழியை சுத்தம் செய்து நன்றாக உலரவிடவும்.
  • எலுமிச்சை சாறை கோழியின் மேல்பாகம் முழுவதும் தடவவும்.
  • வெண்ணெய், பூண்டு, உப்பு, ரோஸ்மேரி, பொடித்த மிளகு தூள், மீதமுள்ள எலுமிச்சை சாறு அனைத்தையும் ஒரு பாத்திரத்தில் கலந்து கொள்ளவும்.
  • கலந்த கலவையை கோழியின் மேல் தடவி மீதமுள்ள வெண்ணெயையும் தடவவும்.
  • கோழியை உருளைகிழங்கின் மேல் வைக்கவும்.
    முழு கோழி வறுவல் தயாரிப்புமுறை
  • கோழியின் கால்கள், இறக்கைகளை நூலால் கட்டிவிடவும். ( இது கோழி கருகிவிடாமல் இருக்க உதவும் )
  • மைக்ரோவேவ் அவனில் 1.5 மணி நேரம் வைக்கவும். அவ்வப்போது சூட்டை சரி பார்க்கவும். 170 டிகிரி ஃபாரஹீட் வந்தால் கோழியை வெளியே எடுத்துவிடவும். அடுத்த 10 நிமிடங்களுக்கு உள்ளே வைக்க வேண்டாம். ஆறிய பின்னர் துண்டுகளாக வெட்டவும். அதிலிருந்து வெளிவரும் தண்ணீர் சுத்தமா நிறமற்று இருந்தால் கோழி வெந்து விட்டதாக எடுத்து கொள்ளலாம். அதிகமாகவும் வேகவிடக்கூடாது. கோழிகறி கெட்டியாகிவிடும்.
    முழு கோழி வறுவல் தயாரிப்புமுறை
  • 10 நிமிடங்கள் கழித்து துண்டுகளாக்கி வெட்டவும்.
    முழு கோழி வறுவல் தயாரிப்புமுறை

முழு கோழி பரிமாற பரிந்துரைப்பது

  • முழு கோழி வறுவலை வறுத்த உருளைகிழங்குடன் வெங்காயம், நறுக்கிய எலிமிச்சை துண்டுகளுடன் பரிமாறவும்.

குறிப்பு

  • துண்டுகளாக்கிய பின்னர் மீதமுள்ள கோழிகறியை சாலட், சாண்ட்விச், சிக்கன் நூடுல்ஸ், சிக்கன் ஃபிரைட் ரைஸ், பிர்ட் பீஸா செய்ய பயன்படுத்தலாம்.
முழு கோழி வறுவல்


உங்கள் கருத்துக்களை சமர்ப்பிக்கவும்...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.