வெண்டைக்காய் சாதம்

வெண்டைக்காய் சாதம்

வெண்டைக்காய் புலாவ் அல்லது பிண்டி புலாவ் அல்லது லேடீஸ்பிங்கர் புலாவ் என்று அழைக்கப்படுகிறது. இது ஒரு சைவ உணவு வகையை சேர்ந்தது. வெண்டைக்காயில் தயாரிக்கப்படுவதாகும். கலவை சாத வகைகள் பல உள்ளன. இது சுவையில் சற்று மாறுபட்டது. தயாரிப்பதும் எளிதாகும். லஞ்ச் பாக்ஸ் கட்ட ஏற்றது. வெண்டைக்காய் வழவழப்பாக இருப்பதால் குழந்தைகள் சிலர் உண்ண விரும்பமாட்டார்கள். இவ்வாறு செய்வதால் காயின் வழவழப்பு தன்மை குறைந்துவிடும். மொறுமொறுப்பாகி விடுவதால் அனைவரும் விரும்பி உண்ணும் வகையில் இருக்கும். நிச்சயம் மாறுபட்ட சுவையில் உள்ள இந்த சமையலை செய்து பாருங்கள்.

வெண்டைக்காய் சாதம் தயாரிப்பு முறை

வெண்டைக்காய் சாதம்

Author: டாலியா டுவிங்கிள்

Ingredients

  • தக்காளி – 2
  • வெண்டைக்காய் – 1/2 கிலோ
  • வெங்காயம் – 1 (நடுத்தர அளவில் உள்ளது)
  • பாஸ்மதி அரிசி – 2 கிண்ணம்
  • இஞ்சி-பூண்டி விழுது – 2 மேசைக்கரண்டி
  • மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
  • கரம் மசாலா தூள் – 1 தேக்கரண்டி
  • மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி
  • கொத்தமல்லி தூள் – 2 தேக்கரண்டி
  • உப்பு – தேவையான அளவு
  • கொத்தமல்லி தழை – அலங்கரிக்க

Instructions

  • அரிசியை 1/2 மணி நேரம் ஊற வைத்து 3.5 கிண்ணம் தண்ணீர் சேர்த்து உப்பு போட்டு வேக வைத்து கொள்ளவும்.
  • வெண்டைக்காயை சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி வெண்டைக்காயில் உப்பும் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக வறுத்து கொள்ளவும்.
  • இன்னொரு வாணலியில் எண்ணெய் சூடாக்கி அதில் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
  • இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
  • தக்காளி சேர்த்து அதில் உள்ள தண்ணீர் வற்றும் வரை வதக்கவும்.
  • மஞ்சள் தூள், மிளகாய் தூள், கொத்தமல்லி தூள், கரம் மசாலா தூள் சேர்த்து ஒரு சிட்டிகை உப்பு சேர்க்கவும்.
  • எண்ணெய் மேலே பிரிந்து வரும் வரை வதக்கவும்.
  • வேக வைத்த சாதத்தை சேர்த்து கிளறவும். அரிசியின் மீது மசாலா முழுவதும் சேரும் வரை நன்றாக கலந்து விடவும்.
  • இறுதியில் வறுத்த வெண்டைக்காயை சேர்த்து கிளறவும். வெண்டைக்காய் சாதத்தில் பரவலாக ஆகும் வரை கிளறி விடவும்.
  • கொத்தமல்லி தழை கொண்டு அலங்கரிக்கவும். தயிர் பச்சடியுடன் பரிமாறவும்.

குறிப்பு

  • நீங்கள் விருப்பபட்டால் மசாலாவுடன் சேர்த்து அரிசியை வேகவைத்து கடைசியில் வறுத்த வெண்டைக்காய் சேர்த்து கிளறி கொள்ளலாம்.


உங்கள் கருத்துக்களை சமர்ப்பிக்கவும்...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.