மைக்ரோவேவ அவனை 425 டிகிரி ஃபாரன்ஹீட் அளவுக்கு சூடுபடுத்தவும்.
உருளைகிழங்கை கழுவி ஒரு டவளால் நன்றாக துடைத்து கொள்ளவும். பெரிய உருளைகிழங்கை உபயோகித்தால் பெரிய துண்டுகளாக வெட்டிகொள்ளவும். சிறிய உருளைகிழங்காக இருந்தால் ஃபோர்கால் குத்தி வைத்து கொள்ளவும்.
ஒரு பெரிய பாத்திரத்தில் உருளைகிழங்கை போட்டு அதில் ஆலிவ் எண்ணெய் , உப்பு, மிளகு , ரோஸ்மேரி போட்டு கலந்து கொள்ளவும்.
பூண்டை நறுக்கி சேர்க்கவும்.
ஒரு அகலமான பாத்திரத்தில் ஆலிவ் எண்ணெய் சிறிதளவு தடவவும். கலந்து வைத்த உருளைகிழங்கை அதில் சம்மாக பரத்தி வைக்கவும்.
கோழியை சுத்தம் செய்து நன்றாக உலரவிடவும்.
எலுமிச்சை சாறை கோழியின் மேல்பாகம் முழுவதும் தடவவும்.
வெண்ணெய், பூண்டு, உப்பு, ரோஸ்மேரி, பொடித்த மிளகு தூள், மீதமுள்ள எலுமிச்சை சாறு அனைத்தையும் ஒரு பாத்திரத்தில் கலந்து கொள்ளவும்.
கலந்த கலவையை கோழியின் மேல் தடவி மீதமுள்ள வெண்ணெயையும் தடவவும்.
கோழியை உருளைகிழங்கின் மேல் வைக்கவும்.
கோழியின் கால்கள், இறக்கைகளை நூலால் கட்டிவிடவும். ( இது கோழி கருகிவிடாமல் இருக்க உதவும் )
மைக்ரோவேவ் அவனில் 1.5 மணி நேரம் வைக்கவும். அவ்வப்போது சூட்டை சரி பார்க்கவும். 170 டிகிரி ஃபாரஹீட் வந்தால் கோழியை வெளியே எடுத்துவிடவும். அடுத்த 10 நிமிடங்களுக்கு உள்ளே வைக்க வேண்டாம். ஆறிய பின்னர் துண்டுகளாக வெட்டவும். அதிலிருந்து வெளிவரும் தண்ணீர் சுத்தமா நிறமற்று இருந்தால் கோழி வெந்து விட்டதாக எடுத்து கொள்ளலாம். அதிகமாகவும் வேகவிடக்கூடாது. கோழிகறி கெட்டியாகிவிடும்.