சோள பிரியாணி (கார்ன் பிரியாணி)

சோள பிரியாணி (கார்ன் பிரியாணி)

சோளத்தில் (கார்ன்) செய்யப்படும் பிரியாணி சுவை மிகுந்தது. மற்ற வகை பிரியாணிக்கு தேவைப்படும் அளவுக்கு சோள பிரியாணி செய்ய பொருட்கள் அதிகம் தேவையில்லை. சோளம் மட்டும் போதுமானதாகும். வெஜிடபிள் பிரியாணிக்கு குறைந்தது மூன்று அல்லது நான்கு வகை காய்கறிகள் தேவை. சிக்கன், மட்டன் பிரியாணிக்கும் செலவு செய்யும் அளவுக்கு அதிக செலவில்லாமல் குறைந்த செலவில், எளிதாக செய்யக்கூடியதாகும். தேவைப்படுவது ஒரு சோளம் மட்டுமே. நீங்களும் ஒரு முறை செய்து சுவைத்து மகிழுங்கள்.

சோள பிரியாணி செய்முறை

சோள பிரியாணி

Course: Main Course
Cuisine: Indian
Author: டாலியா டுவிங்கிள்

Ingredients

  • சோளம் / கார்ன் - 1 கப்
  • பாஸ்மதி அரிசி – 2 கப்
  • வெங்காயம் – 1 பெரியது (நீளவாக்கில் நறுக்கியது)
  • தக்காளி – 2 (பொடியாக நறுக்கியது)
  • இஞ்சி, பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
  • பச்சை மிளகாய் – 3 (நறுக்கியது)
  • எண்ணெய் – 3 மேசைக்கரண்டி
  • நெய் -3 மேசைக்கரண்டி
  • தேங்காய் பால் -1 கப்
  • தண்ணீர் - 3 கப்
  • உப்பு - தேவைக்கேற்ப
  • வர மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
  • மஞ்சள் தூள்- ¼ தேக்கரண்டி
  • கொத்தமல்லி தழை - 1/4 கப்
  • புதினா தழை – 1/4 கப்
  • கரம் மசாலா – பிரியாணி இலை - 1, பட்டை - 2, கிராம்பு - 5, ஏலக்காய் - 3

Instructions

  • பாஸ்மதி அரிசியை ½ மணி நேரம் ஊற வைக்கவும். தண்ணீரை வடித்து தனியாக வைக்கவும்
  • அடி கனமான பாத்திரத்தில் எண்ணெய் அல்லது நெய்யை சூடாக்கி பிரியாணி இலை, ஏலக்காய், கிராம்பு, பட்டை தாளிக்கவும்.
  • வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.
  • வெங்காயம் நிறம் மாறியதும் இஞ்சி-பூண்டு விழுது மற்றும் தக்காளி சேர்க்கவும். நன்றாக வதக்கவும்.
  • அடுத்து பச்சை மிள்காய், நறுக்கிய கொத்தமல்லி தழை, புதினா தழை சேர்க்கவும்.
  • சோள விதைகள், மஞ்சள் தூள், வர மிளகாய் தூள், தேங்காய் பால், உப்பு சேர்க்கவும். அனைத்தும் நன்றாக தண்ணீர் வற்றி கிரேவி பதத்திற்கு வரும் வரை கிளறவும்.
  • இந்த கிரேவியில் அரிசியை (ஊற வைத்து த்ண்ணீர் வடித்த) 3 கப் தண்ணீர் சேர்த்து கிளறவும். உப்பு சரி பார்த்து குக்கரில் வைத்து சமைக்கவும்.
  • கார்ன் பிரியாணி பரிமாற தயார்.

பரிமாற பரிந்துரைப்பது

  • கார்ன் பிரியாணியை தயிர் பச்சடியுடன் சுவைத்து மகிழுங்கள்.


உங்கள் கருத்துக்களை சமர்ப்பிக்கவும்...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.