கரம் மசாலா பொடி - பிரியாணி இலை -1, கிராம்பு -3, பட்டை - 1 , அன்னாசி பூ - 1, ஏலக்காய் - 2 (அனைத்தையும் பொடிக்கவும்)
கொத்தமல்லி இலை - 1 மேசைகரண்டி
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - 2.5 டம்ளர்
Instructions
அரிசியை கழுவி ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். பின்னர் தண்ணீரை வடிகட்டி வைக்கவும்.
கடாய் அல்லது குக்கரில் நெய் அல்லது வெண்ணெய் ஊற்றி கரம் மசாலா சேர்த்து வதக்கவும்.
சீரகம் சேர்த்து வெடிக்கவிடவும்.
ஊற வைத்த அரிசியை சேர்த்து வதக்கி நெய்யுடன் நன்றாக கலக்குமாறு வதக்கவும். (ரைஸ் குக்கரில் சமைப்பதாக இருந்தால் இதை ரைஸ் குக்கரில் மாற்றி தண்ணீர் சேர்த்து சுவிட்ச் ஆன் செய்யவும்)
கொதிக்க வைத்த (அளந்த) தண்ணீரை அரிசியில் சேர்க்கவும். உப்பு சேர்க்கவும்.
குக்கரில் செய்வதாக இருந்தால் குக்கரை மூடி அரிசியை வேகவிடவும்.
கடாயில் செய்வதாக இருந்தால் கொதிக்க ஆரம்பித்த பின்னால் ஒரு மூடியால் மூடி அடுப்பை குறைத்து 15 நிமிடம் வேகவிடவும். அரிசி நன்றாக வெந்திருந்தால் மிருதுவாக இருக்கும். குக்கராக இருந்தால் வெயிட் போட்டு அடுப்பை சிம்மில் 10 நிமிடம் வைக்கவும்.
ஒரு போர்க் கொண்டு மெதுவாக கிளறி விடவும். கொத்தமல்லி இலை கொண்டு அலங்கரிக்கவும்.