மாம்பழ லிச்சி மூஸ்

மாம்பழ லிச்சி  மூஸ்

மாம்பழ மூஸ் பொதுவான இனிப்பு வகை, எப்பொழுது எனது வீட்டில் விருந்து வைத்தாலும் நிச்சயமாக இதை செய்துவிடுவேன். அதிக நபர்கள் இருந்தாலும் சுலபமாக செய்துவிடலாம். முதல் நாளே செய்து வைத்துகொள்ளலாம். மவுஸி காற்றை போல மிகவும் லேசாக இருப்பதால் விருந்து மிகவும் ஹெவியாக இருந்தாலும் இதை உண்ணலாம்.

ஏற்கனவே மாம்பழ புட்டிங் எனது தோழி ராணி பகிர்ந்துள்ளார்கள். புட்டிஙங்கிற்கும் மூஸ்ஸிக்கும் வேறுபாடு தெரியாதவர்களுக்கு நான் ஓரு சிறிய விளக்கம் கொடுக்க விரும்புகிறேன். புட்டிங் மற்றும் மூஸ்ஸி இரண்டும் கிரீம் சேர்ந்த இனிப்பு வகைகளாகும். சுவையில் மூலப்பொருள் சேர்ப்பதில் சற்று வேறுபடும். புட்டிங் கெட்டியாக இருக்கும், ஜெலட்டின் சேர்ப்பதால். மூஸ் காற்றை போல கனமில்லாமல் இருக்கும் ஏனெனில் அடித்த கிரீம் அல்லது அடித்த முட்டையின் வெள்ளை கரு மூலபொருட்களுடன் சேர்ப்பதால் லேசாக இருக்கும். நான் இங்கு மாம்பழ கூழ் உபயோகித்துள்ளேன். ஜெலட்டின் மவுஸி செட்டாவதற்கு பயன்படுத்தலாம். இல்லாவிடினும் சரி.

எனது மாம்பழ மூஸ்ஸில் நான் பதப்படுத்திய டின்னில் உள்ள மாம்பழ கூழ் மற்றும் புதிய மாம்பழ கூழ் இரண்டையும் பயன்படுத்தியுள்ளேன். சீசனுக்கு ஏற்றாற் போல. இரண்டு செய்முறைகளையும் கொடுத்துள்ளேன். முட்டை இல்லாமல் செய்யும் முறையை கொடுத்துள்ளதால் சைவபிரியர்களுக்கு பயன்படும். ஜெலட்டினை செட் ஆவதற்கும் அதற்கு பதிலாக அகர் அகர் அல்லது வெஜ்-பிரண்ட்லி மாம்பழ ஜெல்லி மிக்ஸ் உபயோகிக்கலாம்.

அடுத்த முக்கியமானது அடித்த கிரீம், டபுள் கிரீம் அல்லது பிரஷ் கிரீம் மிதமான அல்லது அதிக கொழுப்புள்ளதாகும். அமுல் குறைந்த கொழுப்புள்ள கிரீமும் பயன்படுத்தலாம். ஆனால் இதை கொழுப்பு அதிகமுள்ள கிரீம் போல நன்றாக அடிக்க முடியாது.

நான் லிச்சி துண்டுகளை மாம்பழ மூஸில் சேர்ப்பேன் இது ஒரு நல்ல ஜோடி. இதன் தனித்தன்மை கடிக்கும் போது இனிப்பான லிச்சி துண்டுகள் நன்றாக இருக்கும். உங்களுக்கு லிச்சி துண்டுகள் கிடைக்காவிடில் சேர்க்காமல் விட்டுவிடலாம். இப்போது மாம்பழ லிச்சி மூஸ் செய்முறையை காண்போம்.

மாம்பழ லிச்சி மூஸ் தயாரிக்க வீடியோ வழிமுறைகள்

மாம்பழ லிச்சி மூஸ் வகை I ( டின்னில் அடைத்த பொருட்கள் கொண்டு செய்யும் முறை)

Prep Time30 minutes
Setting Time5 hours
Total Time30 minutes
Course: Dessert
Cuisine: Indian
Author: டாலியா டுவிங்கிள்

Ingredients

  • மாம்பழ கூழ் – 1 பதப்படுத்தி டின்னில் அடைத்தது (30 அவுன்ஸ்)
  • கூல் விப் (குளிர்ந்த கிரீம்) – 1 பாக்ஸ் (8 அவுன்ஸ்)
  • கண்டன்ஸ்டு பால் (மில்க்மெய்டு) – 1 டின் (14 அவுன்ஸ்)
  • சூடான தண்ணீர் - 1/2 கிண்ணம்
  • ஜெலட்டின் / மாம்பழ ஜெல்லி – 2 பாக்கெட் (14 கிராம் அல்லது 5 தேக்கரண்டி)
  • லிஸ்ஸி – 1 டின் (சிறிய துண்டுகளாக நறுக்கியது)

Instructions

  • ஜெலட்டின் அல்லது ஜெல்லியை தண்ணீரில் கலந்து நன்றாக கரையும் வரை கலக்கவும்.
  • மாம்பழ கூழ் மற்றும் கண்டன்ஸ்டு பால் சேர்த்து கலக்கவும்.
  • மெதுவாக அடித்து வைத்த கிரீமை (கூல் விப்) சேர்க்கவும். நறுக்கிய லிஸ்ஸி சேர்க்கவும்.
  • சிறிய கிண்ணங்கள் அல்லது பெரிய பரிமாறும் பாத்திரத்திற்கு மாற்றி குளிசாதன பெட்டியில் வைக்கவும்.
  • தொடர்ச்சியாக செட் ஆகும் வரை வைக்கவும்.
  • பழத்துண்டுகள், மாம்பழ கூழ் அல்லது புதினா இலை,கொண்டு அலங்கரித்து பரிமாறவும். நாவை ஊறவைக்கும் சுவையான இனிப்பாகும்.

வகை II ( பழங்கள் கொண்டு செய்யும்முறை)

இந்த முறை முக்கியமாக இந்தியாவில் உள்ளவர்களுக்கு உபயோகமாக இருக்கும். புதிய மாம்பழம், லிச்சி வெயில் காலங்களில் கிடைக்கும். கண்டன்ஸ்டு பால் என்பது மில்க்மெய்ட் என்று பல்பொருள் அங்காடிகளில் கிடைக்கும். விப்பிங் கிரீம் மட்டும் சில இடங்களில் கிடைப்பது இல்லை. இது அதிகமான கொழுப்பு சத்துள்ளது 35%. இது கிடைப்பது சற்று கஷ்டம். அமுல் பிரஷ் கிரீம் 25% உள்ளது நிறைய இடங்களில் கிடைக்கிறது. நீங்கள் அடித்த கிரீம் தயாரிக்க கெட்டியான அமுல் பிரஷ்கிரீமை பயன்படுத்த வேண்டும்.இதற்கு நீங்கள் முதலில் கிரீம் பாக்ஸை 3-4 மணிநேரம் குளிர்சாதனபெட்டியில் வைத்து கொழுப்பு சத்துள்ளது மேலே வரும்வரை வைக்கவும். பின்னர் அதை மட்டும் தனியாக எடுக்கவும். நான் இம்முறையை தனியாக உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.

மாம்பழ லிச்சி மூஸ் வகை II (பழங்கள் கொண்டு செய்யும்முறை)

Author: டாலியா டுவிங்கிள்

Ingredients

  • கொழுப்பு சத்துநிறைந்த கிரீம் – 3/4கிண்ணம்
  • இனிப்பான கண்டன்ஸ்டு பால் – 3/4கிண்ணம்
  • சூடான தண்ணீர் – 1/ 4 கிண்ணம்
  • ஜெலட்டின் அல்லது மாம்பழ ஜெல்லி – 2 தேக்கரண்டி
  • புதிய லிச்சி துண்டுகள் – 1/2கிண்ணம்

Instructions

  • முதலாவதாக மாம்பழ கூழ் தயாரித்துகொள்ளவைண்டும். நான் மூன்று மாம்ப்ழங்களை தோல் சீவி, கழுவி, துண்டுகளாக நறுக்கி கூழாக்கியுள்ளேன். சிறிதளவு அலங்கரிக்க தனியாக எடுத்து வைக்கவும்.
  • பழக்கூழை ஒரு பாத்திரத்தில் எடுத்து கண்டண்ஸ்டு பால் சேர்க்கவும்.
  • நன்றாக கலந்து இனிப்பு சரி பார்க்கவும். தேவைப்பட்டால் 1-2 மேசைக்கரண்டி சர்க்கரை சேர்க்கவும்.
  • இப்போது கிரீம் தயாரிக்கும் நேரம். கையால் கிரீமை நன்றாக கடைந்து கொள்ளவும். (குறிப்பு :- கெட்டியான கிரீம் அல்லது டபுள் கிரீம் கடைய சுலபமாக இருக்கும். இந்தியாவில் விப்பிங் கிரீம் சுலபமாக கிடைப்பதில்லை. அமுல் பிரஷ் கிரீம் சுலபமாக கிடைக்கும். அந்த பாக்ஸை பிரீசரில் 3-4 மணி நேரம் வைக்கவும். கிரீமின் மேலே படிந்துள்ள கெட்டியான பாகத்தை ஒரு ஸ்பூனால் எடுத்து கடையவும். கடையும்போது பெரிய பாத்திரமாகவும், பிரீசரில் வைக்க சிறிய பாத்திரத்தையும் பயன்படுத்தவும். இந்த படி மிக முக்கியமானதாகும் இந்தியா போன்ற வெப்பமான பகுதிகளில். ஒரு பாத்திரத்தில் ஐஸ்கட்டிகளை போட்டு அதில் கிரீமை சிறிய கிண்ணத்தில் போடவும். பின்னர் கிரீமை வெளியே எடுத்து கடையவும்.)
  • கெட்டியான குச்சிகள் போன்று வந்தால் கிரீம் தயார் என்று தெரிந்துகொள்ளலாம்.
  • ஜெலட்டினை சூடான தண்ணீரில் போட்டு முழுவதும் கரையும்வரை நன்றாக கலக்கவும். இதை மாம்பழகூழுடன் கலக்கவும்.
  • கிரீமை சிறிது சிறிதாக மாம்பழ கலவையுடன் கலக்கவும்.
  • சிறிது லிச்சி துண்டுகளை சேர்க்கவும்.
  • சிறிய தனித்தனி கிண்ணத்தில் அல்லது பரிமாறும் கிண்ணத்திற்கு மாற்றவும். மேலே லிச்சி மற்றும் மாம்பழதுண்டுகள் கொண்டு அலங்கரிக்கவும். நான் சில நேரங்களில் மாம்பழ கூழால் அலங்கரிப்பது உண்டு. செர்ரி அல்லது புதினா இலை மேலே வைத்தால் கலராக இருக்கும்.
  • குளிர்சாதன பெட்டியில் 3-4 மணிநேரம் வைக்கவும். மாம்பழ மூஸ்சை ருசித்து மகிழவும்.

மாம்பழ லிச்சி மூஸ்

மாம்பழ லிச்சி மூஸ் பரிமாற பரிந்துரைப்பது

• நான் முன்னர் கூறியது போல ஓரு முறை நீங்கள் தயாரித்த மாம்பழ லிச்சி கலவையை தனித்தனியாக சிறிய கிண்ணங்களில் அல்லது பரிமாறும் பெரிய கிண்ணத்தில்மாற்றிகொள்ளலாம். பரிமாறும்போது மேலே மாம்பழ கூழ் அல்லது மாம்பழ சாறு சிறிது ஊற்றலாம். பழத்துண்டுகள்,செர்ரி, ஸ்ட்ராபெர்ரி துண்டு அல்லது புதினா இலை வைக்கலாம். இது பார்க்க அழகாக இருக்கும்.

வேறுபாடாக பரிந்துரைப்பது

• நீங்கள் இந்த கலவையை பிரீசரில் வைத்து எடுத்தால் சுவையான வீட்டில் தயாரித்த மாம்பழ லிச்சி ஐஸ்கிரீம் தயார்.
• கலவையை குளிர் சாதனபெட்டியில் 6-8 மணி நேரம் வைத்து எடுத்தால் சுவையான மாம்பழ லிச்சி பை தயார்.

 



உங்கள் கருத்துக்களை சமர்ப்பிக்கவும்...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.