பீட்ரூட் அல்வா

பீட்ரூட் அல்வா

பாரம்பரியமான இந்திய இனிப்பு வகைகளில் ஒன்றான பீட்ரூட் அல்வா சூடாக, அல்லது குளிர வைத்து மாலை நேர சிற்றுண்டியாக அல்லது பண்டிகை நாட்களில் பரிமாறப்படுவதாகும். பீட்ரூட் அடிக்கடி நமது அண்றாட உணவில் சேர்த்துகொள்வது நல்லது. இது ரத்த அழுத்தத்தை குறைக்கும். இது அதிகப்படியான நைட்ரேட் உள்ளடங்கியது. அதிக இரத்த அழுத்தம் உள்ளவர்கள் தொட்ர்ந்து பீட்ரூட் உண்டால் நல்ல மாற்றத்தை காணலாம்.அனைவரும் பீட்ரூடை ஏதாவது ஒரு வகையில் உணவில் சேர்த்துகொண்டால் மிகவும் நல்லது. வாரம் ஓருமுறையாவது சேர்த்துகொள்ளலாம். நான் இங்கு அல்வா செய்யும் முறையை விவரித்துள்ளேன். குழந்தைகள் விரும்பி உண்பார்கள். நீங்கள் பொரியல், கூட்டு, தயிர் பச்சடி, பட்டாணியுடன் சேர்த்து குருமா என்று பல விதமான உணவு வகைகளை தயாரிக்கலாம். இப்போது பீட்ரூட் அல்வா செய்முறையை காண்போம்.

பீட்ரூட் அல்வா

Author: டாலியா டுவிங்கிள்

Ingredients

  • பீட்ரூட் (துருவியது) – 1 கிண்ணம்
  • பால் – 1 கிண்ணம்
  • சர்க்கரை – 1/ 2 கிண்ணம்
  • நெய் – 2 தேக்கரண்டி
  • ஏலக்காய் பொடி
  • முலாம்பழ விதை - அலங்கரிக்க

Instructions

  • ஒரு வாணலியில் நெய் ஊற்றவும். சூடான பின்னர் துருவிய பீட்ரூட் சேர்த்து சில நிமிடங்கள் வதக்கவும்.
  • பால் மற்றும் சர்க்கரை சேர்க்கவும். மிதமான தீயில் வைத்து நெய் பிரிந்து வாணலியின் ஓரத்திற்கு வரும்வரை வைத்திருக்கவும். ஏலக்காய் பொடி சேர்க்கவும்.
  • முலாம்பழ விதைகள் கொண்டு அலங்கரிக்கவும்.

பரிமாற பரிந்துரைப்பது

  • பீட்ரூட் அல்வாவை சூடாக அல்லது குளிரவைத்து உங்களுக்கு விருப்பமான முறையில் பரிமாறவும்.


உங்கள் கருத்துக்களை சமர்ப்பிக்கவும்...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.