மாம்பழ லிச்சி மூஸ் வகை II (பழங்கள் கொண்டு செய்யும்முறை)
Author: டாலியா டுவிங்கிள்
Ingredients
கொழுப்பு சத்துநிறைந்த கிரீம் – 3/4கிண்ணம்
இனிப்பான கண்டன்ஸ்டு பால் – 3/4கிண்ணம்
சூடான தண்ணீர் – 1/ 4 கிண்ணம்
ஜெலட்டின் அல்லது மாம்பழ ஜெல்லி – 2 தேக்கரண்டி
புதிய லிச்சி துண்டுகள் – 1/2கிண்ணம்
Instructions
முதலாவதாக மாம்பழ கூழ் தயாரித்துகொள்ளவைண்டும். நான் மூன்று மாம்ப்ழங்களை தோல் சீவி, கழுவி, துண்டுகளாக நறுக்கி கூழாக்கியுள்ளேன். சிறிதளவு அலங்கரிக்க தனியாக எடுத்து வைக்கவும்.
பழக்கூழை ஒரு பாத்திரத்தில் எடுத்து கண்டண்ஸ்டு பால் சேர்க்கவும்.
நன்றாக கலந்து இனிப்பு சரி பார்க்கவும். தேவைப்பட்டால் 1-2 மேசைக்கரண்டி சர்க்கரை சேர்க்கவும்.
இப்போது கிரீம் தயாரிக்கும் நேரம். கையால் கிரீமை நன்றாக கடைந்து கொள்ளவும். (குறிப்பு :- கெட்டியான கிரீம் அல்லது டபுள் கிரீம் கடைய சுலபமாக இருக்கும். இந்தியாவில் விப்பிங் கிரீம் சுலபமாக கிடைப்பதில்லை. அமுல் பிரஷ் கிரீம் சுலபமாக கிடைக்கும். அந்த பாக்ஸை பிரீசரில் 3-4 மணி நேரம் வைக்கவும். கிரீமின் மேலே படிந்துள்ள கெட்டியான பாகத்தை ஒரு ஸ்பூனால் எடுத்து கடையவும். கடையும்போது பெரிய பாத்திரமாகவும், பிரீசரில் வைக்க சிறிய பாத்திரத்தையும் பயன்படுத்தவும். இந்த படி மிக முக்கியமானதாகும் இந்தியா போன்ற வெப்பமான பகுதிகளில். ஒரு பாத்திரத்தில் ஐஸ்கட்டிகளை போட்டு அதில் கிரீமை சிறிய கிண்ணத்தில் போடவும். பின்னர் கிரீமை வெளியே எடுத்து கடையவும்.)
கெட்டியான குச்சிகள் போன்று வந்தால் கிரீம் தயார் என்று தெரிந்துகொள்ளலாம்.
ஜெலட்டினை சூடான தண்ணீரில் போட்டு முழுவதும் கரையும்வரை நன்றாக கலக்கவும். இதை மாம்பழகூழுடன் கலக்கவும்.
கிரீமை சிறிது சிறிதாக மாம்பழ கலவையுடன் கலக்கவும்.
சிறிது லிச்சி துண்டுகளை சேர்க்கவும்.
சிறிய தனித்தனி கிண்ணத்தில் அல்லது பரிமாறும் கிண்ணத்திற்கு மாற்றவும். மேலே லிச்சி மற்றும் மாம்பழதுண்டுகள் கொண்டு அலங்கரிக்கவும். நான் சில நேரங்களில் மாம்பழ கூழால் அலங்கரிப்பது உண்டு. செர்ரி அல்லது புதினா இலை மேலே வைத்தால் கலராக இருக்கும்.