முட்டையில்லாத சத்தான சாக்லெட் கேக்

முட்டையில்லாத சத்தான சாக்லெட் கேக்

எனக்கு மிகவும் பிடித்தது சாக்லெட் கேக் என்று ஏற்கனவே உங்களுடன் பகிர்ந்துள்ளேன். அதனால் இதை மாறுபட்ட சுவையில் அடிக்கடி விரும்பி செய்வேன். சாக்லெட் சுவையில் உள்ள இந்த கேக் அனைவரும் விரும்பி உண்ணும் வகையில் இருக்கும்.

எனது குழந்தைகள் மிகவும் விரும்பி சாக்லெட் கேக் உண்கிறார்கள். எனவே சத்தான விதத்தில் மாறுபட்ட சுவையில் தயாரிக்க முயற்சி செய்வேன். மாலை நேரத்திற்கு ஏற்றது அல்லாமல் எப்போது வேண்டுமாணாலும் உண்ணலாம். அந்த முயற்சித்தலில் உருவானது தான் இந்த சமையல் குறிப்பு.இது சத்தானது மட்டுமல்லாமல் மைதாவிற்கு பதில் கோதுமை மாவும், வெள்ளை சர்க்கரைக்கு பதில் நாட்டு சர்க்கரையும் உபயோகித்துள்ளேன். முட்டையும், வெண்ணெயும் சேர்க்காமல் தயாரித்துள்ளேன்.

நம்புவதற்கு கடினமாக இருந்தாலும் உண்மையில் இதில் மைதா,முட்டை,சர்க்கரை, வெண்ணெய் சேர்க்காமல் தயாரித்த கேக் ஆகும்.

இதை தயாரிக்க ஒரு சில பொருட்கள் போதும். மிருதுவான சாக்லெட் கேக் தயாரிக்கலாம்.இந்த கேக் தயாரிக்க எந்தவித ஆடம்பர உபகரணங்களும் தேவை இல்லை. குழந்தைகளுடன் சேர்ந்து சுலபமாக தயாரிக்கலாம்.மாலை குழந்தைகள் பள்ளியில் இருந்து வந்தவுடன் உண்ண ஏற்றது.நான் வேறு எந்த பிரஸர்வேட்டிவ் சேர்க்காமல் சத்தான விதத்தில் தயாரிக்கும் முறையை கொடுத்துள்ளேன்.இதன் சுவையை கூட்ட சாக்லெட் சிப்ஸ் உபயோகித்துள்ளேன்.தற்போது செய்முறையை காண்போம்.

முட்டையில்லாத சக்லெட் கேக் தயாரிக்க வீடியோ வழிமுறைகள்

சத்தான சாக்லெட் கேக் தயாரிப்புமுறை

சத்தான சாக்லெட் கேக்

Prep Time15 minutes
Cook Time45 minutes
Course: Dessert
Cuisine: American
Servings: 4 நபர்கள்
Author: டாலியா டுவிங்கிள்

Equipment

  • பேக்கிங் பான்
  • அவன்

Ingredients

  • கோதுமை மாவு – 1 கிண்ணம்
  • கோக்கோ பவுடர் (இனிப்பில்லாதது) – 1/3 கிண்ணம்
  • பேக்கிங் பவுடர் – 1/2 தேக்கரண்டி
  • பேக்கிங் சோடா – 1/2 தேக்கரண்டி
  • பிங்க் சால்ட் – 1/4 தேக்கரண்டி
  • தயிர் – 1/2 கிண்ணம்
  • பிரவுன் சுகர் (நாட்டு சர்க்கரை) – 3/4 கிண்ணம்
  • வெண்ணிலா எசென்ஸ் – 1 தேக்கரண்டி
  • பால் – 1/2 கிண்ணம்
  • நெய் – ஆலிவ் ஆயில்- 1/2 கிண்ணம்
  • சக்லெட் சிப்ஸ் – 1/4 கிண்ணம்

Instructions

  • ஒரு பாத்திரத்தை எடுத்து கொண்டு அதில் தயிர் மற்றும் நாட்டு சர்க்கரை சேர்த்து நன்றாக அடித்து கொள்ளவும்.
  • பால், எண்ணெய், வெண்ணிலா எசென்ஸ் சேர்க்கவும். மரக்கரண்டி அல்லது மத்தால் கலக்கவும்.
  • கோதுமை மாவு, கோக்கோ பவுடர், பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா, உப்பு இவற்றை இன்னொரு பாத்திரத்தில் போடவும்.
  • மாவில் கட்டியில்லாமல் வரும் வரை நன்றாக கலக்கவும்.
  • கலந்த மாவில் பால்,எண்ணெய் ,எசென்ஸ் கலந்த கலவையை சிறிது சிறிதாக கலக்கவும். மிருதுவான கலவையாகும் வரை கலக்கவும்.
  • சாக்லேட் சிப்ஸை ஒரு ஸ்பூன் கோதுமை மாவுடன் கலந்து அதை மேலே கலந்த கலவையுடன் கலக்கவும்.
  • பேக்கிங் பானில் வெண்ணெய் தடவி கலவையை ஊற்றவும்.மேலே சிறிது சாக்லேட் சிப்ஸ் தூவவும்.
  • முன்னரே சூடாக்கிய (350 டிகிரி பாரஹீட் (180 டிகிரி செண்டிகிரேட்) அவனில் 45நிமிடங்கள்பேக்செய்யவும். ஒவ்வொரு அவனும் வேறு வேறு தன்மை கொண்டது எனவே 35 நிமிடங்கள் கழித்து ஒரு டூத்பிக்கால் நடுவில் சொருகி பார்த்து கேக் வெந்துள்ளதா என்பதை பார்த்து கொள்ளவும்.
  • மிருதுவான கேக் சுவைக்க தயார்.

சத்தான முட்டையிலாத சாக்லேட் கேக் தயாரிக்க விரிவான படிமுறைகள்

ஒரு பாத்திரத்தில் தயிர் மற்றும் நாட்டு சர்க்கரை சேர்த்து அடுத்து கொள்ளவும்.

முட்டையில்லாத சத்தான சாக்லெட் கேக் செய்முறை

பால், எண்ணெய், வெண்ணிலா எசென்ஸ் சேர்த்து கலக்கவும்.

முட்டையில்லாத சத்தான சாக்லெட் கேக் செய்முறை

அதனுடன் கோதுமை மாவு, கோக்கோ பவுடர், பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா, உப்பு சேர்த்து கலக்கவும்.

முட்டையில்லாத சத்தான சாக்லெட் கேக் செய்முறை

மிருதுவான கலவையாகும் வரை கட்டியில்லாமல் கலக்கவும்

முட்டையில்லாத சத்தான சாக்லெட் கேக் செய்முறை

சிறிதளவு சாக்லேட் சிப்ஸை கோதுமை மாவுடன் கலக்கவும். அதையும் மேலே உள்ள கலவையுடன்கலந்துகொள்ளவும்.

முட்டையில்லாத சத்தான சாக்லெட் கேக் செய்முறை

பேக்கிங் பானில் வெண்ணெய் தடவி கலவையை ஊற்றவும். மேலே சாக்லேட் சிப்ஸ் தூவவும்.

முட்டையில்லாத சத்தான சாக்லெட் கேக் செய்முறை

45 நிமிடங்கள் 350 டிகிரி பாரஹீட்டில் அவனில் பேக் செய்யவும்.(180 டிகிரி செண்டிகிரேட்) ஒரு டூத் பிக்கால் கேக்கின் நடுவில் சொருகி வெந்துள்ளதா என்று பார்த்து கொள்ளவும்.

முட்டையில்லாத சத்தான சாக்லெட் கேக் செய்முறை

மிருதுவான சாக்லேட் கேக் உண்ண தயார். சுவைத்து மகிழுங்கள்.

முட்டையில்லாத சத்தான சாக்லெட் கேக்


உங்கள் கருத்துக்களை சமர்ப்பிக்கவும்...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.