ஒரு பாத்திரத்தை எடுத்து கொண்டு அதில் தயிர் மற்றும் நாட்டு சர்க்கரை சேர்த்து நன்றாக அடித்து கொள்ளவும்.
பால், எண்ணெய், வெண்ணிலா எசென்ஸ் சேர்க்கவும். மரக்கரண்டி அல்லது மத்தால் கலக்கவும்.
கோதுமை மாவு, கோக்கோ பவுடர், பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா, உப்பு இவற்றை இன்னொரு பாத்திரத்தில் போடவும்.
மாவில் கட்டியில்லாமல் வரும் வரை நன்றாக கலக்கவும்.
கலந்த மாவில் பால்,எண்ணெய் ,எசென்ஸ் கலந்த கலவையை சிறிது சிறிதாக கலக்கவும். மிருதுவான கலவையாகும் வரை கலக்கவும்.
சாக்லேட் சிப்ஸை ஒரு ஸ்பூன் கோதுமை மாவுடன் கலந்து அதை மேலே கலந்த கலவையுடன் கலக்கவும்.
பேக்கிங் பானில் வெண்ணெய் தடவி கலவையை ஊற்றவும்.மேலே சிறிது சாக்லேட் சிப்ஸ் தூவவும்.
முன்னரே சூடாக்கிய (350 டிகிரி பாரஹீட் (180 டிகிரி செண்டிகிரேட்) அவனில் 45நிமிடங்கள்பேக்செய்யவும். ஒவ்வொரு அவனும் வேறு வேறு தன்மை கொண்டது எனவே 35 நிமிடங்கள் கழித்து ஒரு டூத்பிக்கால் நடுவில் சொருகி பார்த்து கேக் வெந்துள்ளதா என்பதை பார்த்து கொள்ளவும்.