கொய்யா பழ சீஸ்

கொய்யா பழ சீஸ்

கொய்யா சீஸ் என்பது கோவாவில் மிகவும் பிரபலமான ஒரு இனிப்பு வகையாகும். இது போர்த்துக்கீசிய நாட்டிலிருந்து கோவாவிற்கு அறிமுகமான உணவு வகைகளில் ஒன்றாகும். அமெரிக்காவில் இதை வேறு பெயர்களில் அழைப்பர் கொய்யா பேஸ்ட், கொய்யாபேட் என்பர். பிரட் டோஸ்ட் செய்யும்போது பிரட்டின் மேல் தடவ பயன்படுத்தலாம். இது இனிப்பாகவும், கேக் செய்யவும் பயன்படுத்தலாம்.

கொய்யா பழ சீஸ் செய்முறை

கொய்யா பழ சீஸ்

Course: Dessert
Cuisine: Indian
Author: டாலியா டுவிங்கிள்

Ingredients

  • கொய்யா பழம் – 1 கிலோ
  • சர்க்கரை -750 கிராம்
  • எலிமிச்சை சாறு -1 மேசைக்கரண்டி
  • வெண்ணெய் அல்லது நெய் – 1 மேசைக்கரண்டி

Instructions

  • நல்ல கொய்யாக்களை தேர்ந்து எடுத்து இரண்டு ஓரங்களையும் நறுக்கிவிட்டு சுத்தமாக கழுவிக்கொள்ளவும். பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
    கொய்யா பழ சீஸ் செய்முறை
  • நறுக்கிய துண்டுகளை சிறிதளவு தண்ணீர் சேர்த்து வேக வைத்து ஆற வைத்து விழுதாக அரைத்துக்கொள்ளவும். வேக வைப்பது அரைப்பதற்கு எளிதாக இருக்கும்.
    கொய்யா பழ சீஸ் செய்முறை
  • வடிகட்டியில் அல்லது மெல்லிய மஸ்லின் துணியில் வடித்துக் கொள்ளவும். கொட்டைகளை நீக்க செய்ய வேண்டிய வழி இதுவாகும். அதிக நேரம் எடுத்துக்கொண்டாலும் முக்கியமானதாகும்.
  • வடிகட்டிய விழுதை அகலமான ஒரு நான்ஸ்டிக் கடாயில் இட்டு அடுப்பில் வைத்து கிளறவும். அடிபிடித்து விடாமல் கிளறவும்.
    கொய்யா பழ சீஸ் செய்முறை
  • தண்ணீர் நன்றாக வற்றியதும் சர்க்கரை சேர்த்து கிளறிக்கொண்டே இருக்கவும்.
  • மெதுவாக நிறம் மாறி கெட்டியான பதத்திற்கு வரும்போது எலுமிச்சை சாறு மற்றும் வெண்ணெய் அல்லது நெய் சேர்த்து நன்றாக கிளறவும். வெண்ணெய் நல்ல மினுமினுப்பையும், எலுமிச்சைசாறு சுவையையும் கொடுக்கும். ஜாம் பதத்திற்கு வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கிவிடவும். பிரட்டின் மீது தடவி டோஸ்ட் செய்து காலை நேர உணவிற்கு பயன்படுத்தலாம்.
  • தொடர்ச்சியாக கிளறாவிட்டால் பாத்திரத்தில் ஒட்டிக்கொள்ளும்.
  • ஒரு தட்டில் நெய் தடவி கிளறியதை கொட்டி சமமாக பரத்திவிடவும்.
    கொய்யா பழ சீஸ் செய்முறை
  • இரண்டு மணிநேரம் வைத்து பின்னர் துண்டுகளாக வெட்டவும். கொய்யா சீஸை உங்களுக்கு விருப்பமான வடிவத்தில் சதுரமாகவோ, முக்கோணமாகவோ துண்டுகளாக்கவும்.


உங்கள் கருத்துக்களை சமர்ப்பிக்கவும்...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.