மாங்காயை நன்றாக கழுவி ஒரு துண்டால் ஈரம் போக துடைக்கவும்.
சிறிய துண்டுகளாக தோலுடன் நறுக்கவும்.
உப்பு, மஞ்சள் தூள், வெந்தயதூள், வர மிளகாய் தூள், அனைத்தையும் மாங்காயுடன் சேர்த்து நன்றாக கலக்கவும். ருசி பார்த்து ஏதேனும் தேவைப்பட்டால் சேர்க்கவும்.
நல்லெண்ணெயை ஒரு கடாயில் ஊற்றி நன்றாக சூடாக்கவும். அதில் கடுகு, பெருங்காயம், கருவேப்பிலை சேர்க்கவும்.
கடுகு பொரிந்தவுடன் மாங்காய் கலவையை சேர்க்கவும்.
சுத்தமான ஈரமில்லா கரண்டியால் கிளறி விடவும். காய்ந்த சுத்தமான பாட்டிலில் மாற்றி வைக்கவும். உடனடியாகவும் பரிமாறலாம், ஆனால் சில மணி நேரம் கழித்து உண்டால் சுவை இன்னும் கூடுதலாக இருக்கும்.