ராகி இட்லி / ராகி தோசை

ராகி இட்லி / ராகி தோசை

இன்றைய இளைய தலைமுறையினர் உணவு கட்டுபாட்டில் அதிக விழிப்புணர்வுடன் உள்ளனர். உடல்பயிற்சி மற்றும் ஊட்டச்சத்து ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர். அதிகமான சிறு தானிய வகைகள் உண்ணும் பழக்கம் குறைந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் அவற்றிற்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்துள்ளனர். இதில் மிக முக்கிய இடத்தில் உள்ள ராகி அல்லது கேழ்வரகு மீண்டும் நம் உணவில் இடம்பெற்றுள்ளது. ராகி மாவு என்பது ராகி தானியத்தை அரைத்து தயாரிப்பது அல்லது ராகி தானியத்தை முளை கட்டி காயவைத்து அரைப்பது ஆகும். ராகி மிகவும் சிறு தானியமாக இருப்பதால் அதை சுத்தம் செய்து பாலீஸ் செய்வது சுலபமல்ல. ஆனால் இயற்கையிலேயே ராகி சுத்தமாக இருக்கும். இதில் சத்துக்கள் அதிக அளவில் உள்ளன. ராகியில் கால்சியம் சத்து அதிகமுள்ளது. இது எலும்புகலுக்கும், பல்லுக்கும் உறுதியையும் ஆஸ்டியோபோரோசிஸ் வருவதையும் தடுக்கிறது. கிளைசெமிக் குறியீடு குறைய ராகி மற்ற தானியங்களை விட மிகவும் அதிக அளவில் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. நாம் அன்றாட உணவில் ராகியை காலை அல்லது மதியம் சேர்த்து கொண்டால் அன்றைய நாள் நமக்கு ஆரோக்கியமான நாளாகும். முளை கட்டிய ராகியில் இரும்பு சத்தும், விட்டமின் சி யும் அதிக அளவில் உள்ளது.

விட்டமின் சி முளைகட்டிய ராகியில் இருப்பது இரும்பு சத்தை உட்கிரக்க உதவுகிறது. இரத்த சோகை உள்ளவர்களுக்கும் ராகி உண்பது நல்லது. இதில் இயற்கையிலேயே புரத சத்து உள்ளது மேலும் அமினோ ஆஸிட் மூலம் மெட்டோபாலிஸம் சீராக இருக்க, இரத்த விருத்தி, பதட்டம் குறைய, மன அழுத்தம் குறைய உதவுகிறது. இது நார்சத்து கொண்டதால் முறையான செரிமானம் ஆக உதவுகிறது. பாலூட்டும் தாய்மார்களுக்கு பால் சுரக்கவும், ஹீமோகுலோபின் அளவை அதிகமாக்கவும் உதவுகிறது. பாலில் அத்தியாவசியமான தாதுக்கள் குழந்தை மற்றும் தாய்க்கு அதிகரிக்க உதவுகிறது.

தானிய வகைகளில் ராகி தென்னிந்தியாவிலும், கர்நாடகாவிலும் மிகவும் பிரசித்தமான ஒன்றாகும். கர்நாடகாவின் மிக பிரசித்தமான பிரதான மதிய உணவு அல்லது இரவு உணவு ராகி முடே (ராகி உருண்டை) ஆகும். ராகி கஞ்சி குழந்தைகளுக்கு தாய்பால் மறக்க கொடுக்கப்படுகிறது. ராகி கஞ்சி தமிழ் நாட்டில் சத்துள்ள ஆகாரமாக கருதப்படுகிறது. நமது நிரந்தர பட்டியலில் உள்ள சத்துள்ள உணவு பொருள் ஏதேனும் ஒரு வகையில் மாற்றங்களுடன் சமைத்தால் தான் விரும்பி உண்ண முடியும். இதில் மிகவும் சிறந்த வகைகளே ராகி இட்லி மற்றும் ராகி தோசை ஆகும். ராகியில் பல வகையான உணவுகள் இருந்தாலும் எனக்கு மிகவும் பிடித்தவை ராகி இட்லி அல்லது ராகி தோசை தான். சுலபமாக தயாரிக்க கூடியது. கார சட்னியுடன் உண்டால் அதற்கு இணை எதுவும் இல்லை.

ராகி இட்லி / ராகி தோசை தயாரிப்புமுறை

ராகி இட்லி / ராகி தோசை

Prep Time12 hours
Cook Time10 minutes
Total Time12 hours 10 minutes
Course: Breakfast
Cuisine: Indian
Servings: 6 நபர்கள்
Author: டாலியா டுவிங்கிள்

Ingredients

  • ராகி தானியம் – 2 கிண்ணம் (ராகி மாவு 1.5 கிண்ணம் பயன்படுத்தலாம்)
  • உளுத்தம் பருப்பு – 1/2 கிண்ணம்
  • உப்பு – 1 தேக்கரண்டி

தோசை, இட்லி தயாரிக்க

  • எண்ணெய் – இட்லி தட்டில் தடவ (தோசை தயாரிக்க)

Instructions

ராகி இட்லி மாவு தயாரிக்கும் முறை

  • உளுத்தம் பருப்பு, ராகி( தானியம்) இரண்டையும் தனித்தனியாக இரவு முழுவதும் அல்லது குறைந்தது 3 மணி நேரம் ஊற வைக்கவும்.
    ராகி இட்லி / ராகி தோசை தயாரிப்புமுறை
  • உளுத்தம் பருப்பை தனியாக நன்றாக மிருதுவாகும் வரை அரைக்கவும்.
  • ராகியை தனியாக அரைக்கவும்.
  • உளுந்து மாவுடன் ராகி மாவை தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.(குறிப்பு : நீங்கள் ராகி மாவு உபயோகித்தால் உளுந்து மாவு அரைத்த பின்னர் அதனுடன் மாவை கலந்து உப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு கலந்து கொள்ளவும்.)
    ராகி இட்லி / ராகி தோசை தயாரிப்புமுறை
  • எந்த முறையில் தயாரிப்பதாக இருந்தாலும் இரவு முழுவதும் புளிக்க வைத்து மாவு இரண்டு மடங்காக ஆகும் வரை வைக்க வேண்டும். (குறிப்பு: நீங்கள் குளிர் பிரதேசத்தில் இருந்தால் மாவை மைக்ரோவேவ் அவனில் வைத்து புளிக்க வைக்கலாம்)
    ராகி இட்லி / ராகி தோசை தயாரிப்புமுறை
  • மாவு நன்றாக புளித்த பின்னர் இட்லி அல்லது தோசை தயாரிக்கலாம். மீதமுள்ள மவை குளிர் சாதன பெட்டியில் 3-4 நாட்கள் வைத்து பயன்படுத்தலாம்.
    ராகி இட்லி / ராகி தோசை தயாரிப்புமுறை

ராகி தோசை தயாரிப்புமுறை

  • தோசை கல்லை சூடாக்கி தண்ணீர் தெளித்தால் ஆவியாகிவிடும் அளவு பார்க்கவும்.
  • அல்லது 4 சொட்டு எண்ணெய் ஊற்றி தோசை கல்லில் தடவிவிடவும். ராகி மாவை ஒரு கரண்டியில் எடுத்து ஊற்றி வட்டமாக தேய்த்துவிடவும்.
  • சிறிதளவு எண்ணெய் தோசையை சுற்றிலும் ஊற்றவும். ஓரங்கள் பிரவுன் கலர் ஆகும் வரை வைக்கவும்.
  • தோசையை திருப்பி விட்டு அடுத்த பக்கமும் வேக விடவும். சுவையான ராகி தோசை தயார். மாவு தோசை போன்று மொறுமொறுப்பாக இருக்காது. ஒரு பக்கம் வேக 2-3 நிமிடங்கள் ஆகும்.

ராகி இட்லி தயாரிக்கும் முறை

  • இட்லி தட்டில் எண்ணெய் தடவவும். மாவை பாதியளவு குழியில் ஊற்றவும்.
    ராகி இட்லி / ராகி தோசை தயாரிப்புமுறை
  • ஆவியில் 10 நிமிடங்கள் வேக வைக்கவும். இட்லி வெந்தபின்னர் அடுப்பை நிறுத்திவிடவும். 2 நிமிடங்கள் ஆற விடவும்.
    ராகி இட்லி / ராகி தோசை தயாரிப்புமுறை
  • கத்தி அல்லது ஸ்பூனால் எடுத்து பரிமாறவும்.

வேறுபாடாக பரிந்துரைப்பது

  • உடனடி ராகி தோசை: ராகி மாவு 1 கிண்ணம், 1 கிண்ணம் அரிசி மாவு இரண்டையும் மோர் சேர்த்து கலக்கவும். பொடியாக நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி தழை, பச்சை மிளகாய், துருவிய கேரட் சேர்க்கவும். உடனடியாக தோசை ஊற்ற மாவு தயார்.
  • இன்னொரு முறை சத்தான ராகி தோசை தயாரிக்க மாவு அரைக்காமல். நீங்கள் ராகி மாவை இட்லி மாவுடன் கலந்து கொள்ளலாம். தென்னிந்தியர்கள் எப்போதும் இட்லி மாவு தயாரித்து வைத்திருப்பார்கள். சத்தான இம்முறையை வாரம் ஒரு முறை தயாரித்து பயன்படுத்தலாம்.
  • இதே மாவை பயன்படுத்தி ராகி குழி பணியாரம் தயாரிக்கலாம். அதன் செய்முறையை தனியாக பகிர்கிறேன்.

ராகி இட்லி & தோசை பரிமாற பரிந்துரைப்பது

  • ஏதேனும் ஒரு வகை கார சட்னி அல்லது சாம்பார் அல்லது குழம்புடன் பரிமாறலாம்.

ராகி மாவில் தயாரிக்கப்படும் ராகி இட்லி தக்காளி சட்னியுடன் பரிமாறலாம்.

ராகி இட்லி

ராகி தானியத்தில் தயாரிக்கப்படும் ராகி இட்லி பச்சை பட்டாணி குழம்புடன் பரிமாறலாம்.

ராகி இட்லி


உங்கள் கருத்துக்களை சமர்ப்பிக்கவும்...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.