உளுத்தம் பருப்பு, ராகி( தானியம்) இரண்டையும் தனித்தனியாக இரவு முழுவதும் அல்லது குறைந்தது 3 மணி நேரம் ஊற வைக்கவும்.
உளுத்தம் பருப்பை தனியாக நன்றாக மிருதுவாகும் வரை அரைக்கவும்.
ராகியை தனியாக அரைக்கவும்.
உளுந்து மாவுடன் ராகி மாவை தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.(குறிப்பு : நீங்கள் ராகி மாவு உபயோகித்தால் உளுந்து மாவு அரைத்த பின்னர் அதனுடன் மாவை கலந்து உப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு கலந்து கொள்ளவும்.)
எந்த முறையில் தயாரிப்பதாக இருந்தாலும் இரவு முழுவதும் புளிக்க வைத்து மாவு இரண்டு மடங்காக ஆகும் வரை வைக்க வேண்டும். (குறிப்பு: நீங்கள் குளிர் பிரதேசத்தில் இருந்தால் மாவை மைக்ரோவேவ் அவனில் வைத்து புளிக்க வைக்கலாம்)
மாவு நன்றாக புளித்த பின்னர் இட்லி அல்லது தோசை தயாரிக்கலாம். மீதமுள்ள மவை குளிர் சாதன பெட்டியில் 3-4 நாட்கள் வைத்து பயன்படுத்தலாம்.
ராகி தோசை தயாரிப்புமுறை
தோசை கல்லை சூடாக்கி தண்ணீர் தெளித்தால் ஆவியாகிவிடும் அளவு பார்க்கவும்.
அல்லது 4 சொட்டு எண்ணெய் ஊற்றி தோசை கல்லில் தடவிவிடவும். ராகி மாவை ஒரு கரண்டியில் எடுத்து ஊற்றி வட்டமாக தேய்த்துவிடவும்.
சிறிதளவு எண்ணெய் தோசையை சுற்றிலும் ஊற்றவும். ஓரங்கள் பிரவுன் கலர் ஆகும் வரை வைக்கவும்.
தோசையை திருப்பி விட்டு அடுத்த பக்கமும் வேக விடவும். சுவையான ராகி தோசை தயார். மாவு தோசை போன்று மொறுமொறுப்பாக இருக்காது. ஒரு பக்கம் வேக 2-3 நிமிடங்கள் ஆகும்.
ராகி இட்லி தயாரிக்கும் முறை
இட்லி தட்டில் எண்ணெய் தடவவும். மாவை பாதியளவு குழியில் ஊற்றவும்.
ஆவியில் 10 நிமிடங்கள் வேக வைக்கவும். இட்லி வெந்தபின்னர் அடுப்பை நிறுத்திவிடவும். 2 நிமிடங்கள் ஆற விடவும்.