ரவா பொங்கல்
ரவா பொங்கல், பாரம்பரிய வெண்பொங்கலின் வேறுபாடாக செய்வதாகும். பொங்கல் விரும்பிகள் அரிசிக்கு மாற்றாக வேறு சேர்க்க விரும்பினால் இதை செய்யலாம். ரவா பொங்கலை தேங்காய் சட்னி, சாம்பார், கொத்சு உடன் பரிமாறலாம். இது சுலபமாகவும், விரைவாகவும் ஒரே வாணலில் செய்யகூடியது. இந்த சிற்றுண்டி காலை அவசரத்தில் செய்ய உகந்தது.
ரவா பொங்கல் செய்முறை
ரவா பொங்கல்
Ingredients
- ரவை - 1 கிண்ணம்
- பாசி பருப்பு - 1/3 கிண்ணம்
- நெய் - 1 மேசைக்கரண்டி
- தண்ணீர் - 3 கிண்ணம்
- உப்பு - தேவைக்கேற்ப
தாளிக்க தேவையான பொருட்கள்
- நெய் - 2 மேசைக்கரண்டி
- இஞ்சி - 1” துண்டு (பொடியாக நறுக்கியது)
- மிளகு- 1 தேக்கரண்டி (இடித்தது)
- சீரகம் - 1 தேக்கரண்டி (இடித்தது)
- முந்திரி பருப்பு - 5
- கருவேப்பிலை - 1 கொத்து
Instructions
- அகலமான வாணலில் பாசிபருப்பை 3 நிமிடங்கள் மணம் வரும் வரை வறுக்கவும். அதை தனியாக எடுத்து வைக்கவும்.
- வாணலில் 1 மேசைக்கரண்டி நெய்விட்டு ரவையை நிறம் மாறும் வரை வறுக்கவும். அதை தனியாக எடுத்து வைக்கவும்.
- வாணலில் 2 மேசைக்கரண்டி நெய்விட்டு, தாளிக்க தேவையான பொருட்களை சேர்த்து தாளிக்கவும். முந்திரி நிறம் மாறும் வரை வறுக்கவும்.
- பாசிபருப்பு, உப்பு, தண்ணீர்(1 கிண்ணம்) சேர்த்து 10 நிமிடங்கள் கொதிக்கவிடவும்.
- மீதமுள்ள தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
- தண்ணீரை கிளறிக்கொண்டே ரவையை மெதுவாக சேர்க்கவும்.
- அடுப்பை குறைத்து ரவையை 10 நிமிடங்கள் ஈரம் போகும் வரை வேகவிடவும்.
பரிமாற பரிந்துரைப்பது
- இந்த சுவையான ரவா பொங்கலை தேங்காய் சட்னி, சாம்பார், கொத்சு உடன் பரிமாறவும்.