காளான் வறுவல்
காளான் வறுவல் எனபது மிகவும் எளிமையாக எந்த வகை காளானிலும் செய்யக்கூடிய ஒரு உணவாகும். காளான் வறுவலை கோவாவில் சில்லிகாளான் என்று அழைப்பர். தென்னிந்தியாவில் காளான் மிளகு வறுவல் என்பர். இதை செய்வத்ற்கு குறைந்த பொருட்களைக் கொண்டு விரைவாக செய்யகூடிய ஒன்றாகும். காளான் வறுவலில் காரம் சேர்ப்பது பச்சை மிளகாய் மற்றும் மிளகுதூள் ஆகும். இவை இரண்டுமே இந்த உணவிற்கு அதிக ருசியைக்கொடுக்கிறது. நீங்கள் ஒருமுறை இதை சமைத்தால் உணவகங்களில் செய்யும் காளான் வறுவலை வீட்டில் எவ்வளவு எளிதாக செய்வது என்பது அறிந்து கொள்வீர்கள்.
நான் இந்த காளான் வறுவலை என்னிடம் தற்போது உள்ள வெள்ளை பட்டன் காளான் கொண்டு சமைக்கிறேன். நீங்கள் உங்களுக்கு கிடைக்கும் எந்த வகை காளானிலும் சமைக்கலாம். இந்த காளான் வறுவல் விருந்துக்கு முன் பசியை தூண்டுவதற்கும், ஸ்டப்பிங், மற்றும் சாண்ட்விச் செய்யவும் பயன்படுத்தலாம். சாதத்திற்கும், ரொட்டி வகைகளுடனும் பரிமாற மிகவும் ஏற்றது. இப்பொழுது செய்முறையை காண்போம்.
காளான் வறுவல் செய்முறை
காளான் வறுவல்
Ingredients
- காளான் – ½ கிலோ (நீளவாக்கில் நறுக்கியது)
- வெங்காயம் - 1 (நீளவாக்கில் நறுக்கியது)
- பூண்டு - 3-4 பற்கள் (பொடியாக நறுக்கியது)
- பச்சை மிளகாய் - 2-3 (கீறியது)
- வரமிளகாய் தூள் - 1/4 தேக்கரண்டி
- மிளகு தூள் - 1 தேக்கரண்டி
- மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
- கரம் மசாலா தூள் - 1/4 தேக்கரண்டி
- உப்பு – தேவையான அளவு
- கொத்தமல்லி தழை- அலங்கரிக்க
தாளிக்க தேவையான பொருட்கள்
- எண்ணெய் – 1 மேசைக்கரண்டி
- கடுகு – ½ தேக்கரண்டி
- சீரகம் – ½ தேக்கரண்டி
- கருவேப்பிலை - 1 கொத்து
Instructions
- காளானை சுத்தம் செய்து கிச்சன் டவலால் துடைக்கவும். பொதுவாக வறுவல் செய்யும் போது காளானை கழுவினால் அதில் உள்ள ஈரப்பதம் குறைவதில்லை. அதிகப்படியான தண்ணீர் இருந்தால் வறுக்கும்போது மொறுமொறுப்பாக இருக்காது.
- காளானை நீளவாக்கில் நறுக்கிக்கொள்ளவும்.
- ஒரு அகலமான கடாயில் எண்ணெயை சூடாக்கி கடுகு, சீரகம் , கருவேப்பிலை தாளிக்கவும்.
- கடுகு வெடித்தவுடன் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், நறுக்கிய பூண்டு சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.
- அடுத்து காளானை சேர்த்து குறைந்த தீயில் 6 நிமிடங்கள் அல்லது காளான் உள்ள தண்ணீர் வற்றும் வரை வதக்கவும்
- உப்பு, வர மிளகாய் தூள், மிளகு தூள், ம்ஞ்சள் தூள், கரம் மசாலா தூள் சேர்க்கவும். நான் சில சமயங்களில் ¼ கப் குடமிளகாய் சேர்ப்பதுண்டு. வறுவலின் நிறம் நன்றாக இருக்க, ஆனால் அது உங்கள் விருப்பம்.
- 2-4 நிமிடங்கள் நன்றாக வதக்கவும் காளான் நிறம் மாறும் வரை.
- அடுப்பை அணைத்து வேறு பரிமாறும் கிண்ணத்திற்கு மாற்றவும். கொத்தம்ல்லி தழை மற்றும் எலிமிச்சை துண்டுகள் கொண்டு அலங்கரிக்கவும்.
விரிவான காளான் வறுவல் செய்முறை
½ கிலோ காளானை நீளவாக்கில் நறுக்கி கொள்ளவும். ஒரு வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கவும். பூண்டை தட்டிக்கொள்ளவும். ப்ச்சை மிளகாய் கீறிக்கொள்ளவும்.
2 மேசைக்கரண்டி எண்ணெயை ஒரு கடாயில் சூடாக்கி கடுகு, சீரகம், கருவேப்பிலை தாளிக்கவும்.
கடுகு வெடிக்க ஆரம்பித்தவுடன் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு சேர்க்கவும்.
வெங்காயம் நிறம் மாறும் வரை வதக்கவும்.
இப்போது காளானை சேர்க்கவும். குறைந்த தீயில் வைத்து 6 நிமிடங்கள் சமைக்கவும். காளானிலிருந்து வெளியில் வரும் தண்ணீர் வற்றி காளான் பாதி அளவிற்கு சுருங்கி சிறிதாகிவிடும்.
தேவையான அளவு உப்பு சேர்த்து, சிகப்பு மிளகாய் தூள், மிளகு தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா தூள் சேர்க்கவும். உங்களுக்கு தேவையான அளவு காரம் சேர்த்துக்கொள்ளவும்.
அனைத்தையும் மேலும் 2 நிமிடங்கள் வதக்கி அடுப்பை அணைத்துவிடவிடவும். காளான் மிளகு வ்றுவல் தயார். பரிமாறும் முன்னர் கொத்தமல்லி தழை கொண்டு அலங்கரிக்கவும்.
பரிமாற பரிந்துரைப்பது
- காளான் வறுவலை கலந்த வகை சாதத்துடனும், வெள்ளை சாதத்துடன் பரிமாறலாம்.
- ரொட்டி வகைகளுக்கும் பொருத்தமானதாகும்.
- பாவ் பன், பிரட் சாண்ட்விச் வகைகளுடன் பரிமாறலாம்.
- நான் பாஸ்தாவுடன் கலந்து செய்வதையும், பர்கர் மீது டாப்பிங் செய்வதையும் விரும்பி செய்வேன்.