Go Back
Print
Recipe Image
Smaller
Normal
Larger
Print Recipe
மிளகு காளான் மசாலா
Course:
Side Dish
Cuisine:
Indian
Author:
டாலியா டுவிங்கிள்
Ingredients
காளான் – 1 பாக்கெட்
வெங்காயம் - 1 பெரியது அல்லது 2 சிறியது
தக்காளி - 1 பெரியது அல்லது 2 சிறியது
இஞ்சி - பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
பூண்டு – 4 பற்கள்
இடித்தது
பச்சை மிளகாய் - 1
தனியா தூள் – 1 தேக்கரண்டி
வரமிளகாய் தூள் -1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
கரம் மசாலா தூள் - 1 சிட்டிகை
எண்ணெய் – 1 தேக்கரண்டி
கடுகு - 1/4 தேக்கரண்டி
சீரகம் - 1/4 தேக்கரண்டி
உப்பு - தேவைகேற்ப
கொத்தமல்லி - 1 கையளவு
பகுதி - 2
பூண்டு - 4 பற்கள்
மிளகு – 2 தேக்கரண்டி
சீரகம் - 1/4 தேக்கரண்டி
Instructions
காளான், வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை நறுக்கி வைக்கவும்.
பகுதி-2ல் குறிப்பிட்டுள்ளவற்றை மிக்சியில் அரைத்து கொள்ளவும்.
வாணலில் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம் தாளிக்கவும்.
வெங்காயம், கருவேப்பிலை, பச்சை மிளகாயை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.
தக்காளி சேர்த்து வதக்கவும்.
வர மிளகாய் தூள், மஞ்சள் தூள், மிளகு தூள், கரம் மசாலா தூள், தனியா தூள் சேர்த்து வதக்கவும்.
காளானை சேர்த்து வதக்கவும். வாணலை சிறிது நேரம் மூடி வைத்து காளானில் நீர் வற்றும் வரை வதக்கவும்.
அரைத்த விழுதை சேர்க்கவும்.
எலுமிச்சை சாறு சேர்க்கவும். ஒரு நிமிடம் வதக்கி இறக்கவும். காரம் அதிகம் வேண்டுமானால் மிளகு சேர்ககலாம்.
கொத்தமல்லி சேர்த்து கலந்தால் சுவையான காளான் மிளகு மசாலா தயார்.