காலிஃபிளவர் வறுவல்
காலிஃபிளவர் வறுவல் மாலை நேரத்தில் சாப்பிட ஏற்றதாகும். மிகவும் சுலபமா செய்யக்கூடிய ஒன்றாகும். காலிஃபிளவர் மலிவாக கிடைக்கும் நேரங்களில் அடிக்கடி செய்யலாம். குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். மாலை நேரம் உண்ண ஏற்றது.
காலிஃபிளவர் வறுவல் செய்முறை
காலிஃபிளவர் வறுவல்
Ingredients
- காலிஃபிளவர் – 1 (துண்டுகளாக வெட்டியது)
- மஞ்சள் தூள் – ½ (தேக்கரண்டி)
- வர மிளகாய் தூள் -2 (தேக்கரண்டி)
- சிக்கன் 65 மசாலா- 1 (மேசைக்கரண்டி)
- இஞ்சி, பூண்டு விழுது -1 (தேக்கரண்டி)
- அரிசி மாவு, அசோள மாவு – 2 (மேசைக்கரண்டி)
- எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு
- உப்பு – ருசிக்கேற்ப
Instructions
- காலிபிளவரை சிறு துண்டுகளாக நறுக்கி சூடான தண்ணீரில் உப்பு சேர்த்து 5 நிமிடங்கள் போடவும்.
- தண்ணீரை வடித்து காலிபிளவரை வேறு கிண்ணத்தில் மாற்றவும்
- தேவையான அளவு உப்பு, வர மிளகாய் தூள், மஞ்சள் தூள், இஞ்சி பூண்டு விழுது, சிக்கன் 65 மசாலா, அரிசி மாவு சேர்த்து கலக்கவும்.
- அனைத்தையும் நன்றாக கலக்கவும். அதில் உள்ள ஈரப்பதத்தில் எல்லாம் நனறாக கலந்துவிடும்.
- எண்ணெயை ஒரு கடாயில் சூடாக்கி காலிபிளவர் துண்டுகளை பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
- அதிகப்படியான எண்ணெயை ஒரு டவலில் ஒற்றி எடுக்கவும். மீதமுள்ளவற்றை பொரித்து எடுக்கவும்.
பரிமாற பரிந்துரைப்பது
- நூடுல்ஸ், எலுமிச்சை சாதம், தக்காளி சாதம், சீரக சாதம் அல்லது மற்ற எந்த கலவை சாதத்துடனும் பரிமாறலாம்.