சோள உருளை (கார்ன் ரோல்ஸ்)
குழந்தைகளின் பிறந்த நாள் விழா, மாலை நேர சிறிய விழாக்களின் போது செய்ய ஏதுவான ஒரு சத்தான உணவாகும். பார்த்தவுடன் சாப்பிட தோன்றும் ஒன்று. குழந்தைகளின் டிபன் பாக்ஸுக்கு விரும்பும் ஸ்நாக் வகைகளில் இதுவும் ஒன்றாகும். பிக்னிக் செல்லும் போதும் செய்யலாம். கார்ன் ரோல்ஸ் செய்ய அதிக பொருட்களும் தேவையில்லை. சோளமும், உருளைக்கிழங்கு மட்டும் அவசியம். மீதமுள்ளவை வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு எளிதாக செய்துவிடலாம்.
அனைவரும் விரும்பி உண்ண ஏற்றது. ஒருமுறை செய்து ருசித்தால் நீங்கள் அடிக்கடி செய்யும் ஸ்நாக் வகைகளில் இதுவும் ஒன்றாகிவிடும். சோள உருளை செய்முறையை இங்கு காணலாம்.
சோள உருளை (கார்ன் ரோல்ஸ்) செய்முறை
சோள உருளை
Ingredients
- வேகவைத்து மசித்த சோள விதைகள் - 1 கப்
- வேக வைத்த சோள விதைகள் - ½ கப்
- நடுத்தர அளவில் உள்ள வேக வைத்த உருளைக்கிழங்கு - 4
- சோள மாவு - 2 மேசைக்கரண்டி
- பிரட் துண்டுகள் - 3-4 (அல்லது 1/2 கப் பிரட் தூள்)
- பூண்டு பற்கள் - 5-6
- இஞ்சி துண்டு - 1 அங்குளம்
- பச்சை மிளகாய் - 3-4
- ஆம்சூர் பவுடர் - 1/2 தேக்கரண்டி
- மேசைக்கரண்டி சர்க்கரை - 1/2 தேக்கரண்டி
- கருப்பு உப்பு - 1/2 தேக்கரண்டி
- கருப்பு மிளகு தூள் - 1/2 தேக்கரண்டி
- வர மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
- உப்பு - ருசிக்கேற்ப
- கொத்தமல்லி தழை - 1/2 கப்
- எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
Instructions
- ஒரு பெரிய பாத்திரத்தில் வேகவைத்த உருளைக்கிழங்கு, மசித்த சோளம், வேகவைத்த சோளம் சேர்க்கவும்.
- இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாயை மிக்சியில் பொடித்து அதனுடன் கலக்கவும்.
- பொடியாக நறுக்கிய கொத்தமல்லி சேர்க்கவும். உப்பு, கருப்பு உப்பு, சர்க்கரை, கருப்பு மிளகு, வர மிளகாய், ஆம்சூர் பவுடர் அனைத்தையும் நன்றாக கலக்கவும்.
- சோள மாவு மற்றும் பிரட் தூள் சேர்த்து நன்றாக கலக்கவும்.
- சிறிய உருளைகளாக உருட்டி டூத்பிக் கொண்டு சொருகி லாலிபாப் போல் செய்யவும்.
- எண்ணெயை சூடாக்கி செய்துவைத்த உருளைகளை பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
பரிமாற பரிந்துரைப்பது
- தக்காளி சாஸ் அல்லது கொத்தமல்லி, புதினா சட்னியுடன் பரிமாறவும்.